தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரசாயன பூச்சி கொல்லி பயன் படுத்தும் முறைகள்

Go down

ரசாயன பூச்சி கொல்லி பயன் படுத்தும் முறைகள் Empty ரசாயன பூச்சி கொல்லி பயன் படுத்தும் முறைகள்

Post  meenu Thu Mar 21, 2013 2:17 pm


பூச்சிக் கட்டுப்பாடு செய்ய பூச்சிக்கொல்லி உபயோகிக்கும் போது, நீரின் தரம் பாதிப்படையாமல் பயன்படுத்தும் முறையைக் கையாளுவது மிகவும் முக்கியமாகும்.
பூச்சி மேலாண்மையில் சான்றிதழ் பெற்றவராகவும், புதிய யுத்திகளை அறிந்தவராகவும் இருக்கவேண்டும்.
பூச்சிக்கொல்லிகளை தகுந்த நேரத்தில் சிறந்த கட்டுப்பாட்டு திறன் கிடைக்கும் சமயத்தில் உபயோகிக்க வேண்டும்.
பூச்சியின் பருவ சுழற்சி வெப்பத்தினாலும், ஈரப்பதத்திலும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. அநேக நேரங்களில், பூச்சிகள் நடமாட்டமில்லாத / செயலற்ற நிலையில் இருக்கும் போது பூச்சிக்கொல்லி உபயோகம் நல்ல பலன் தராது.
நச்சுத்தன்மை குறைவாக உள்ள பூச்சிக்கொல்லிகளை பூச்சிக்கட்டுப்பாடு ஏற்படும் வகையில் உபயோகிக்க வேண்டும்.இவ்வகை பூச்சிக்கொல்லிகள், சுற்றுச்சூழலில் சேரும் நச்சுத் தன்மையின் அளவு குறைகிறது.
பூச்சிகளில் எதிர்ப்புத் தன்மை அதிகரிக்காமலிருக்க ஒரே வகுப்பைச் சார்ந்த பூச்சிக்கொல்லியின் உபயோகத்தை தவிர்க்கவேண்டும்.
ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை ஒரே வகுப்பு அல்லது ஒரே வகை பூச்சிக்கொல்லியை சார்ந்திராது. எதிர் மறையான கால சூழ்நிலைகளில் அதாவது வேகமான காற்று, ஈரப்பதம் அதிகமுள்ள சமயத்தில் பூச்சிக்கொல்லி உபயோகிப்பதைத் தவிர்க்கவேண்டும்.
எளிதில் ஆவியாகக்கூடிய இரசயானப் பொருட்களான, 2, 4-டி எஸ்டர், மெதைல் பாரத்தியான் ஆகியவற்றை அதிக வெப்பமுள் சமயத்தில் உபயோகிக்கக்கூடாது.
பூச்சிக்கொல்லி பிரயோகிக்கும் கருவிகளை தயார் நிலையில் வைக்கவேண்டும். பழுதான பாகங்களை அவ்வப்போது பழுது பார்த்து மாற்றவேண்டும்.
பூச்சிக்கொல்லி தெளிப்பவர்கள், முன்னரே தெளிக்கப்பட்ட இடங்களை அடையாளமிடவேண்டும்.
குறைந்த அளவு இரசாயனத்தைப் பயன்படுத்தி அதிகக் கட்டுப்பாட்டுத் திறனை தரும் முறைகளைக் கையாளவேண்டும்.
குறிப்பிட்ட / தேவையான இடத்தில் மட்டும் தெளிப்பதினால் சுற்றுச்சூழல் மாசுப்படுவதைத் தவிர்க்கலாம்.
தேவையற்ற நேரங்களில் உபயோகிப்பதை தவிர்க்கவும், மட்டுமல்லாது சரியான அளவை சரியான நேரத்தில், சரியான இடத்தில் தெளிக்கும் போது, மறுபடியும் உபயோகிக்க வேண்டிய அவசியமாகிறது.
மேற்பரப்பில் நீர் உள்ள இடங்களில், உபயோகிக்கும் போது, அதிக அளவும் காற்று அடித்துச் செல்லும் வகையிலும் இல்லாமல் கவனமாக உபயோகிக்க வேண்டும்.
இரசாயனப் பொருட்கள் உபயோகிக்கும் நேரத்தை சரியாக தெரிவு செய்யவேண்டும். மழைக்காலங்களிலோ, நீர்க்கசிவு ஏற்படும் போதோ, நீர் வழிந்தோடல் சமயத்திலோ தெளித்தல் நிலத்தடி நீரில் / தேவையற்ற பகுதிகளில் நச்சுத் தன்மை கலக்க வாய்ப்பு அதிகமாகும்.
பாதுகாப்பு வளையம் கிணறுகள், மேற்பரப்பில் உள்ள நீர் நிலைகளிலிருந்து 50 -100 அடி இடைவெளி விட்டு, இராசயனங்களை உபயோகிக்கவேண்டும்.
பாசன வாய்க்கால்களில் பின் நோக்கி பாய்வதைத் தடுக்கும் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளதா என உறுதி செய்யவேண்டும்.
இராசயனப் பொருட்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை சரியாகப் படித்து அதைக் கடைப்பிடிக்கவேண்டும்.
வேலையாட்களின் உடல் பாகத்தில் படாதவாறு பாதுகாப்பு கவசங்கள் அணியவேண்டும்.
தற்செயலாக வேலையாட்களில் கைகளிலோ, கண்ணிலோ இரசாயனங்கள் பட்டால் உடனடியாக அதைக் கழுவவும். அவசர சிகிச்சை அளிக்கும் தகவல் மற்றும் பொருட்களை தயார் நிலையில் வைக்கவேண்டும்.
எதிர்பாராத விதமாக பூச்சிக்கொல்லி குடித்துவிட்டால், அவசர சிகிச்சை அளிக்க அருகில் உள்ள சிகிச்சை மையங்களில் தகவல்களை அறிதல் அவசியமாகும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum