சீரகம் சீரகம்
Page 1 of 1
சீரகம் சீரகம்
மருத்துவக் குணங்கள்:
தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து சீரகக் குடிநீர் தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை நாள் முழுவதும் அவ்வப்போது பருகி வர எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் இந்தச் சீரக நீரூக்கு உண்டு.
சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.
மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.
சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே வாரம் ஒருமுறை தடுப்பு முறையாகக் கூட இதைச் சாப்பிடலாம்.
உடலுக்கு குளிர்ச்சியும் தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.
திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடியைச் சேர்த்து பருகினால் ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.
சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால் கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டியை பொடித்து சாப்பிட்டால் மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.
சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம் தினம் இரண்டு வேளையாக சாப்பிட்டால் உடல் அசதி நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.
சீரகத்தை லேசாக வறுத்து அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்புகள் வலுப்பெறும், நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால் வயிற்றுப் பொருமல் வற்றி நலம் பயக்கும்.
சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய அரைத்து எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால் குடல் கோளாறுகள் குணமாகும்.
ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து சாப்பிட்டால் அதிக பேதி போக்கு நிற்கும்.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய அரைத்து பசும்பாலில் கலந்து குடித்து வர நல்ல பலன் கிடக்கும்.
சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர கல்லீரல் கோளாறு குணமாகும்.
சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.
கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்து தேனில் குழைத்து சாப்பிட்டால் தொடர் விக்கல் விலகும்.
மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» சீரகம் சீரகம் சீரகம் சீரகம்
» சீரகம் சீரகம்
» மன அழுத்தத்திற்கு மருந்தாகும் சீரகம்
» மனநோய் குணப்படுத்தும் சீரகம்
» இரத்த அழுத்தத்தை குணமாக்கும் சீரகம்.
» சீரகம் சீரகம்
» மன அழுத்தத்திற்கு மருந்தாகும் சீரகம்
» மனநோய் குணப்படுத்தும் சீரகம்
» இரத்த அழுத்தத்தை குணமாக்கும் சீரகம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum