காளான் பிரியாணி
Page 1 of 1
காளான் பிரியாணி
தேவையான பொருட்கள்:
பச்சரிசி அல்லது பாசுமதி அரிசி – 1/4 கிலோ
பெரிய வெங்காயம்- 2
தக்காளி – 3
காளான் – 200 கிராம்
புதினா – 1 கட்டு (சிறியது)
பச்சை மிளகாய் – 5
உப்பு – தேவையான அளவு
அரைக்க தேவையானவை:
இஞ்சி – 2 இஞ்ச் அளவு
பூண்டு – 12 பல்லு
முந்திரி – 3
பாதாம் – 2
பிஸ்தா – 2
தாளிக்க தேவையானவை:
நெய் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
பட்டை – 6
கிராம்பு – 6
ஏலக்காய் – 4 (தட்டிக் கொள்ளவும்)
சோம்பு பொடி – 1 தேக்கரண்டி
அன்னாசி பூ – 2 இதழ்
மராட்டி மொக்கு – 3
பிரிஞ்சி இலை – 1
மல்லி பொடி – 1/2 தேக்கரண்டி
பிரியாணி மசாலா – 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை – 1 கைப்பிடி
செய்முறை:
அரிசியை அரை மணி நேரம் தண்ணீர் விட்டு ஊற வைத்துக் கொள்ளவேண்டும். பின்பு அரிசியை கழுவி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
புதினாவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவேண்டும். தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பச்சை மிளகாயை எடுத்து நடுவில் கீறிக் கொள்ள வேண்டும்.
காளானை நறுக்கி இரண்டு முறை நன்றாகக் கழுவி வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
குக்கரில் இரண்டு தேக்கரண்டி நெய், இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஆகியவற்றை ஊற்றி நன்கு காய்ந்தும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, மராட்டி மொக்கு, பிரிஞ்சி இலை போட்டு தாளிக்க வேண்டும்.
அனைத்தும் பொரிந்ததும் இஞ்சி, பூண்டு, முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றை அரைத்து அந்த விழுதை சேர்த்து சிவக்க வதக்க வேண்டும். பின்பு சோம்புவையையும் சேர்த்து வதக்க வேண்டும்.
நறுக்கிய பெரிய வெங்காயம், புதினா தழை ஆகியவற்றை சேர்க்க வேண்டும். பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி நடுவில் கீறிய பச்சை மிளகாய் இரண்டையும் சோ்த்து வதக்க வேண்டும்.
பின்பு நறுக்கிய காளானை சேர்த்து வதக்கவேண்டும். அத்துடன் மஞ்சள்பொடி, பிரியாணி மசாலா, மல்லி மசாலா சேர்த்து போட்டு வதக்க வேண்டும்.
ஊறவைத்து வடிகட்டிய அரிசியை போட்டு லேசாக கிளறி, சுடு தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சோ்த்து நன்கு கிளறிய பின்பு குக்கரை மூடி இரண்டு விசில் வரும் வரை வேக வைத்து அடுப்பிலிருந்து இறக்க வேண்டும்.
குக்கரில் ஆவி அடக்கியதும் பொடியாக நறுக்கி வைத்திருந்த கொத்தமல்லி தழையை தூவி லேசாக கிளறி பரிமாற வேண்டும்.
தேவையப்பட்டால் குக்கரை மூடி வேகவைப்பதற்கு முன், அரை எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்து அதில் சோ்த்து வேக வைக்கலாம்.
இப்பொழுது சுவையான காளான் பிரியாணி தயார்!
சைவச் சாப்பாடு சாப்பிடுவர்களுக்கு காளான் பிரியாணி ஒரு வரப்பிரசாதம். காளான் புரதச்சத்து நிரம்பியது.
இப்பொழுது உணவில் முக்கிய இடம் பெறும் காளான் மருத்துவக் குணங்கள் நிறைந்தது ஆகும்.
காளான் மருத்துவக் குணங்கள்:
காளானில் உயிர்ச்சத்துக்களும், தாதுச்சத்துக்களும் நிறைந்துக் காணப்படுகிறது. நீரழிவு நோய், புற்றுநோய், உடல் பருமன் ஆகியவை நோய்கள் உடையவர்களுக்கு ஏற்ற உணவாக காளான் பயன்படுகிறது.
காளானில் அதிக அளவு தாமிரச்சத்து இருப்பதால் மூட்டு வலி உடையவர்களுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. காளானை சமைத்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் மிகுதியாகக் காணப்படும் கொழுப்பைக் குறையச் செய்கிறது.
காளான் உயர் இரத்த அழுத்தம், இரத்தக் குழாய்களின் உட்பரப்பில் ஏற்படும் விரிவு ஆகியவற்றைக் குறையச் செய்கிறது.
காளானிலிருந்து பென்சிலின் என்ற அன்டிப்பாயட்டிக்(ANTIBIOTIC) மருந்துத் தயாரிக்கப்படுகிறது.
இத்தனை மருத்துவக் குணங்கள் நிறைந்த காளானை நாம் அடிக்கடி உணவில் சோத்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி சிறப்பாக வாழலாம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum