தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பருப்பு குருமா

Go down

பருப்பு குருமா  Empty பருப்பு குருமா

Post  oviya Tue Mar 19, 2013 9:15 pm

தேவையான பொருள்கள்:

துவரம் பருப்பு = 100 கிராம்
கடலை பருப்பு = 100 கிராம்
பொட்டு கடலை = 50 கிராம்
சோம்பு = 1 ஸ்பூன்
இஞ்சி = அரைய‌ங்குலம்
பூண்டு = 1 முழுதாக
எலுமிச்சை சாறு = 2 ஸ்பூன்
புதினா = 1 கட்டு
தேங்காய் = ஒரு மூடி
பச்சை மிளகாய் = 6
ஏலக்காய் = 3
கசகசா = 2 ஸ்பூன்
மிளகாய் பொடி = அரை ஸ்பூன்
தனியா பொடி = 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி = சிறிதளவு
தக்காளி = 100 கிராம்
வெங்காயம் = 50 கிராம்
பட்டை = 2
பிரிஞ்சி இலை = 1
கருப்பு ஏலக்காய் = 4
ஜாதிக்காய் பொடி = அரை ஸ்பூன்
எண்ணெய் = 100 கிராம்
உப்பு = தேவையான அளவு

செய்முறை:

கடலை பருப்பையும், துவரம் பருப்பையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து கழுவிக் கொள்ளவும். இதனோடு பொட்டு கடலை, தோல் நீக்கிய இஞ்சி, பூண்டு, சோம்பு, ஏலக்காய் சேர்த்து சிறிது உப்பு போட்டு கரகரப்பாக அரைக்கவும்.
இதனோடு மிளகாய் பொடி, புதின, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறவும். தேங்காய், கசகசா, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். வெங்காயம், தக்காளி, நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கலந்து வைத்திருக்கும் மாவை சேர்த்து சிறு தீயில் வதக்கவும். மாவு வெந்து கெட்டியாக அதே சமயம் உதிரியாக வரும். அதை எடுத்து தனியாக வைக்கவும்.
வாணலியில் தக்காளி, வெங்காயம், மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, தனியா பொடி, அரைத்த தேங்காய் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் விட்டு உப்பு போட்டு மூடி கொதிக்க விடவும். கொதித்து பச்சை வாசனை போனதும் வதக்கி வைத்திருகும் மாவைச் சேர்த்து அரை நிமிடம் வைத்டு இறக்கவும்.
எண்ணெயில் பட்டை, கருப்பு ஏலக்காய், சிறிது தட்டிய பிரிஞ்சி இலை, கறிவேப்பிலையோடு தாளித்து சேர்த்து ஜாதிக்காய் பொடி தூவி கிளறி இறக்கவும்.

சுவையான பருப்பு குருமா தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பூரி, பரோட்டா, நூடுல்ஸ், ஆப்பம், அடை, பிரட், நாண், இட்லி, தோசை ஆகியவற்றோடும் பரிமாற‌லாம்.

மருத்துவ குணங்கள்:

துவரம் பருப்பில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், இரும்பு சத்து மற்றும் வைட்டமின் B அதிகமாக இருப்பதால் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் மலச்சிக்கல், நீரிழிவு போன்றவற்றை குறைக்கும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum