பீன்ஸ் தயிர் கறி
Page 1 of 1
பீன்ஸ் தயிர் கறி
தேவையான பொருள்கள்:
பீன்ஸ் = அரை கிலோ
தயிர் = 1 கப்
வெங்காயம் = 100 கிராம்
இஞ்சி = சிறிய துண்டு
பச்சை மிளகாய் = 3
மிளகாய் வற்றல் = 1
சீரகம் = அரை ஸ்பூன்
கடுகு = அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
பெருங்காயம் = சிறிது
எண்ணெய் = 3 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
கறிவேப்பிலை = தேவையான அளவு
செய்முறை:
பீன்ஸை ஆய்ந்து பொடியாக நறுக்கவும். வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றையும் பொடியாக நறுக்கவும். சீரகத்தை பொடி செய்யவும்.
பீன்ஸை சீரகப் பொடி, உப்பு சேர்த்து குக்கரில் வைத்து ஆவியில் வேகவிடவும். தண்ணீர் விட வேண்டாம்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து வெந்த பீன்ஸையும் தயிரையும் சேர்த்து தயிர் பாதியாக சுண்டும் வரை திறந்து வைத்து வதக்கவும். கொத்தமல்லி கிள்ளி போட்டு பரிமாறலாம்.
சுவையான பீன்ஸ் தயிர் கறி தயார். இதை ரைஸ் மற்றும் ஃபிரைட்ரைஸ் வகைகள் சப்பாத்தி, பரோட்டா, நூடுல்ஸ் போன்றவற்றுடன் பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
பீன்ஸில் வைட்டமின்கள் A மற்றும் C, ஊட்டச்சத்து அதிக அளவில் இருப்பதால் இதய நோய், நீரிழிவு, இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
இந்த பீன்ஸ் தயிர் கறி சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் பெறும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum