தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சின்ன வெங்காயம் பயிரிடும் முறை

Go down

சின்ன வெங்காயம் பயிரிடும் முறை Empty சின்ன வெங்காயம் பயிரிடும் முறை

Post  meenu Tue Mar 19, 2013 6:31 pm

சின்ன வெங்காயம் பயிரிடும் முறை Horti_vegetables_small%20onion_clip_image002 சின்ன வெங்காயம் பயிரிடும் முறை Horti_vegetables_small%20onion_clip_image004

மண் மற்றும் தட்பவெப்பநிலை : நல்ல வடிகால் வசதியுடன்
கூடிய வண்டல் மண் மிகவும் உகந்தது. களர் நிலங்கள் ஏற்றவை அல்ல. களிமண்
நிலத்தில் வெங்காயம் சாகுபடி மிகவும் கடினம். வெப்பமான பருவ நிலையில்
போதுமான அளவு மண்ணின் ஈரப்பதத்தில் இப்பயிர் நன்கு வளரும். சிறந்த
மகசூலுக்கு மண்ணின் கார அமிலத்ததன்மை 6-7 இருத்தல்வேண்டும்.

பருவம் : ஏப்ரல் – மே மற்றும் அக்டோபர் – நவம்பர்

நிலம் தயாரித்தல்

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழவு செய்யவேண்டும். கடைசி உழவின் போது 45 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைக்கவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

எக்டருக்கு அடியுரமாக 30 கிலோ தழைச்சத்து, 60 கிலோ மணிச்சத்து மற்றும்
30 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய இராசயன உரங்களை அளிக்கவேண்டும்.

ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள்(கிலோ) – அடியுரம்
தழை -30kg மணி -60kg சாம்பல் -30kg
இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிலோவில்)
10:26:26 – 116kg யூரியா – 40kg சூப்பர் பாஸ்பேட் -188kg


விதையும் விதைப்பும்

எக்டருக்கு 1000 கிலோ விதை வெங்காயம். கோ (ஓ என்) 5 விதை மூலம் உற்பத்தி
செய்வதாகும். ஒரு எக்டர் நடவு செய்ய கிராம் விதை போதுமானதாகும்.

விதைப்பு : நடுத்தர அளவுள்ள, நன்கு காய்ந்த வெங்காயத்தை பார்களின் இருபுறமும் சரிவில் 10 செ.மீ இடைவெளியில் நடவு செய்யவேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைத்த மூன்றாம் நாளும், பின்பு வாரம் ஒரு முறையும் நீர்ப் பாய்ச்சவேண்டும். அறுவடைக்கு 10 நாட்களுக்கு முன்பு நடவு செய்யவேண்டும்.

களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி

தேவைப்படும் போது களை எடுக்கவேண்டும். வெங்காயம் நட்ட 30 நாட்கள்
கழித்து, மேலுரமாக எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்து, கொடுக்கக்கூடிய இராசயன
உரத்தை அளிக்கவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

இலைப்பேன் : பூச்சிகள் வெளிர் மஞ்சள் நிறத்தில்
காணப்படும். இப்பூச்சிகள், இலைகளை சுரண்டி உறிஞ்சும். இதனால் இலைகள் வெண்
திட்டுகளாகக் காணப்படும். இலைகள் நுனியிலிருந்து வாடும். இதனைக்
கட்டுப்படுத்த எக்டருக்கு மீதைல் டெமட்டான் 500 மில்லி அல்லது பாஸ்போமிடான்
300 மில்லி தெளிக்கவேண்டும். அதிகம் தழைச்சத்து இடுவதையும், நெருங்கி
நடுவதையும் தவிர்க்கவேண்டும்.

வெங்காய ஈ : சாம்பல் நிற ஈக்கள், மண்ணில் உள்ள
இடுக்குகளில் முட்டையிடும். அவற்றிலிருந்து வரும் சிறிய வெண்ணிறப்
புழுக்கள் நிலத்தடியில் உள்ள தண்டுப்பகுதி மற்றும் வெங்காயத்தைக் குடைந்து
தின்று அழுகச் செய்யும்.

கட்டுப்பாடு : மீதைதல் டெமட்டான் 25 இசி 1 மிலி
மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும். அல்லது
மோனோகுரோட்டோபாஸ் ஒரு மில்லி மருந்துடன் டீப்பால் 0.5 மில்லி மருந்தை 1
லிட்டர் தண்ணீரில் கலந்த கலவையுடன் கலந்து தெளிக்கவேண்டும்.

வெட்டுப்புழு : இப்புழுக்கள் இலைகளை அரித்து சல்லடை போன்று ஆக்கும். வளர்ந்த புழுக்கள் வெங்காயத் தாள்களை வெட்டிச் சேதப்படுத்தும்.

கட்டுப்பாடு : குளோபைரிபாஸ் 2 மில்லி மருந்தை ஒரு
லிட்டர் தண்ணீரில் கலந்து மண்ணில் ஊற்றவேண்டும். வரப்பு ஓரங்களில் ஆமணக்கை
கவர்ச்சிப்பயிராகப் பயிரிட்டு அதில் காணப்படும் சந்தனப் பொட்டு போன்ற
முட்டைக் குவியல்களையும், கூட்டமாகக் காணப்படும். இளம்புழுக்களையும்
சேகரித்து அழிக்கவேண்டும்.

இலைப்புள்ளி நோய் : இதனைக் கட்டுப்படுத்த மான்கோசெப் 2 கிராம் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும்.

அறுவடை

வெங்காயத் தாள்கள் சுமார் 60-75 சதம் காயத் தொடங்கியவுடன் அறுவடை
செய்யவேண்டும். தாள்களுடன் சேர்த்து வெங்காயத்தைப் பிடுங்கிய பின்னர் மேல்
தாள்களை நீக்க வெங்காயத்தை காயவைக்கவேண்டும். பின்பு நல்ல காற்றோட்டமுள்ள
அறைகளில் சேமித்து வைக்கவேண்டும்.

அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன்னர் மாலிக்ஹைட்ரகசைடு என்ற பயிர்
முளைப்பைக் கட்டுப்படுத்தும் பயிர் வினையில் இராசயனப் பொருளை 2500 பிபிஎம்
என்ற விகிதத்தில் இலைவழி ஊட்டமாகத் தெளிக்கவேண்டும். இவ்வாறு செய்வதால்
வெங்காயத்தின் சேமிப்புக் காலத்தை அதிக்கப்படுத்தலாம்.

இரகங்கள்: கோ 1, கோ 2, கோ 3, கோ 4, கோ என் 5 மற்றும் எம்டியு 1.

மகசூல் : எக்டருக்கு 70 முதல் 90 நாட்களி் 12-16
டன்கள் வெங்காயம் கோ (ஓ என்) 5 இரகத்தில் 90 நாட்களில் ஒரு
எக்டரிலிருந்து 18 டன் மகசூல் அறுவடை செய்யலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum