நெற்பயிரில் குருத்துப்பூச்சி கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
Page 1 of 1
நெற்பயிரில் குருத்துப்பூச்சி கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
முக்கூடல் வேளாண்மை உதவி இயக்குநர் செந்தில்குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- பாப்பாக்குடி வட்டாரத்தில் பிசான பருவ நெல் சாகுபடி
பரவலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த வருடங்களில் குருத்துப்பூச்சி
தாக்குதலால் மகசூல் இழப்பு ஏற்பட்டு ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். - இந்த வருடம் குருத்துப்பூச்சி தாக்குதலில் இருந்து பயிரை பாதுகாத்துக்கொள்ளும் தொழில்நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்.
- குருத்துப்பூச்சியின் தாய் அந்துப்பூச்சிகள் நெற்பயிரின் இலைகளின் நுனியில் குவியல் குவியலாக முட்டைகளிடும்.
- இம்முட்டைகள் பழுப்பு மற்றும் மஞ்சள் நிற ரோமங்களால்
மூடப்பட்டிருக்கும். இதில் இருந்து வெளிவரும் இளம் மஞ்சள் நிற புழுக்கள்
நெற்பயிரின் தூர்களை தாக்கி சேதம் ஏற்படுத்தும். - அப்போது பயிர் குருத்து வாடிவிடும். அந்த குருத்தினை கைகளால் உருவினால் எளிதாக வந்து விடும்.
- குருத்தின் அடியில் பூச்சியினால் ஏற்பட்ட சேதமும் கதிரின் தண்டினை துண்டித்திருப்பதும் தெரியும்.
- இந்த அறிகுறி தெரிந்தால் விவசாயிகள் உடனடியாக புரொப்பனோபாஸ் 50 சதம்,
இன்டோசோகார்ப் 14.50 சதம், கார்டாப் ஹெட்ரோகுளோரைடு 50 சதம் ஆகிய
மருந்துகளில் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டும். - திரவங்களான சாண்டோவிட், பைட்டோவிட், லிங்காவிட் ஆகியவற்றில் ஒன்றினை
ஏக்கருக்கு 100 மி.லி வீதம் கலந்து சீராக தெளித்து குருத்துப்பூச்சியினை
கட்டுப்படுத்தி மகசூல் இழப்பை தடுக்கலாம். - மேலும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளில் ஒன்றான இனக்கவர்ச்சி பொறிகளை
நெல் நடவு செய்த உடன் ஒரு ஏக்கரில் 4 எண்ணம் வீதம் வைத்து ஆண்
அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழித்து குருத்துப்பூச்சி தாக்குதலை
கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நெற்பயிரில் குருத்துப்பூச்சி கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
» நெற்பயிரில் குருத்துப்பூச்சி கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
» நெற்பயிரில் குருத்துப்பூச்சி கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
» நெற்பயிரில் குருத்துப்பூச்சி கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
» நெற்பயிரில் குருத்துப்பூச்சி மேலாண்மை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum