மானாவாரி நிலங்களில் விதை நேர்த்தி
Page 1 of 1
மானாவாரி நிலங்களில் விதை நேர்த்தி
மானாவாரி நிலங்களில் விதை நேர்த்தி செய்தால் கூடுதல் மகசூல் கிடைக்கும்
இவ்வாறு ஓசூர் வேளாண் உதவி இயக்குனர் நாகராஜ் தெரிவித்தார்.
- தற்போது மானாவாரி நிலங்களில் விதைப்பு துவங்கியுள்ளது.
- இவற்றில் நிலக்கடலை மற்றும் துவரை பயிர் சாகுபடியில் பூஞ்சாண விதை நேர்த்தி மற்றும் நுண்ணுயிர் உரவிதை நேர்த்தி செய்ய வேண்டும்.
- பூஞ்சாண விதை நேர்த்தி செய்வதின் மூலம் விதைகள் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்தி பயிர் எண்ணிக்கையை பராமரிக்க ஏதுவாகிறது.
- நுண்ணுயிர் உரவிதை நேர்த்தி செய்வதின் மூலம் விதைகள் நன்கு முளைத்து நல்ல வேர் வளர்ச்சி மற்றும் தண்டு வளர்ச்சியுடன் காணப்படும்.
- பயிர்கள் ஒரளவிற்கு வறட்சியை தாங்கி வளரும்.
- இந்த நுண்ணுயிர்கள் வேர் முடிச்சுகளில் தங்கி வாயு மண்டலத்தில் உள்ள
தழைசத்தை செடிகளுக்கு வழங்கும்.இதன் மூலம் உரசெவிற்கான செலவினம் குறைந்து
வருமானம் அதிகரிக்கும். - பூஞ்சாண விதை நேர்த்தி செய்யும் போது ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பண்டாசியம் அல்லது 4 கிராம் மேங்கோசெப் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மாவிரிடி ஆகியவற்றை கலந்து 24 மணி நேரம் கழித்து விதைக்க வேண்டும்.
- அதேபோல் நுண்ணுயிர் உரங்களான பாஸ்போ பாக்டீரியா மற்றும் ரைசோபியம் நுண்ணுயிர் கலவையினை விதைப்பதற்கு முன் கலந்து விதைக்க வேண்டும்.
- நிலக்கடலை பயிருக்கு ஒரு ஏக்கருக்கு உண்டான 55 கிலோ
பருப்புக்கு 2 பாக்கெட் ரைசோபியம் 2 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றை
500 மில்லி அரிசி கஞ்சியில் கலந்து அதனை விதைகளுடன் கலக்க வேண்டும். - அதன்பின் அவ்விதைகளை நிழலில் உலர வைத்து விதைக்க வேண்டும்.
- பயிறு வகை விதைகளுக்கு 1 கிலோ விதைகளுக்கு 1 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா மற்றும் 1 பாக்கெட் ரைசோபியம் பயன்படுத்த வேண்டும்.
- தேவையான அளவு உயிர் உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பில்
உள்ளது. அதை விவசாயிகள் 50 சதவீதம் மானிய விலையில் பெற்று பயன்படுத்தி
பயனடையுமாறு கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு ஓசூர் வேளாண் உதவி இயக்குனர் நாகராஜ் தெரிவித்தார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மானாவாரி நிலங்களில் விதை நேர்த்தி
» மானாவாரி நிலங்களில் விதை நேர்த்தி
» விதை நேர்த்தி செய்தால் விளைச்சலை அதிகரிக்கலாம்
» நிலக்கடலை விதை நேர்த்தி
» நிலக்கடலை விதை நேர்த்தி
» மானாவாரி நிலங்களில் விதை நேர்த்தி
» விதை நேர்த்தி செய்தால் விளைச்சலை அதிகரிக்கலாம்
» நிலக்கடலை விதை நேர்த்தி
» நிலக்கடலை விதை நேர்த்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum