அடர் நடவு முறையில் கொய்யா சாகுபடி
Page 1 of 1
அடர் நடவு முறையில் கொய்யா சாகுபடி
மகசூலை அதிகரிக்க அடர் நடவு முறையில் கொய்யா சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு தோட் டக்கலைத் துறையினர் பரிந்துரை செய்துள்ளனர்.
ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் கொய்யா ஆண்டு முழுவதும் காய்க்கும் தன்மை உடையது.
இது அனைத்து வகை மண் ணிலும் எளிதில் வளரும் தன்மை கொண்டது.
ஆப்பிள் பழத்திற்கு நிகரான சக்தி கொண்ட கொய்யா பழத்தில் உள்ள அதிகப்படியான “சி’ வகை சத்து ஜலத்தோஷ நிவாரணியாகவும், மலச் சிக் கலை தீர்க்கக் கூடியதாகவும் உள்ளன.
சாதாரண நடவு முறையில் 5 முதல் 6 மீட்டர் இடைவெளியில் நடவு செய்வதால் ஏக்கருக்கு 111 மரக் கன்றுகள் மட்டும் நடவு செய்யப்பட்டு 10 மெட்ரிக் டன் மகசூல் பெறும் நிலை தற்போது உள்ளது.
ஆனால் 2 முதல் 3 மீட்டர் இடைவெளியில் அடர் நடவு முறையில் சாகுபடி செய்வதால் ஏக்கருக்கு ஆயிரம் செடிகள் நடவு செய்வது மூலம் ஆண்டுக்கு 16 மெட்ரிக் டன் மகசூல் பெறலாம்.
சாதாரண நடவு முறையில் கொய்யா மரங்கள் அதிகமாக உள்ள இடைவெளியில் தழைத்து வளர நீண்ட காலத்தை எடுத்துக் கொள்கிறது.இவ்வாறு தழைத்து வளரும் கொய்யா மரம் சூரிய வெளிச்சம், நீர் மற்றும் பயிர் சத்துக்களுக்கு போட்டியிடும் சூழ்நிலை உருவாகி மகசூல் குறைய காரணமாக உள்ளது.
ஆனால் 2 முதல் 3 மீட்டர் இடைவெளியில் கொய்யா செடிகளை சாகுபடி செய்யும் போது பயிர்களுக்கு தேவையான சூரிய வெளிச்சம், நீர், பயிர் சத்துக்களுக்கு போட்டியிடும் தன்மை முற்றிலும் குறைந்து விடுகின்றன.
பாரம்பரிய முறையில் ஊடு பயிர் சாகுபடிக்கு தேவைப்படும் அதிக கூலியாட்களுக்கான செலவினமும் இல்லாமல் நிலத்தின் அனைத்து பகுதிகளையும் பயன்படுத்தி மகசூல் தரக்கூடியதாக அடர் நடவு சாகுபடி முறை உள்ளது.
அடர் நடவு முறையில் கொய்யா சாகுபடி செய்வதால் குறைவான இடத்திலிருந்து அதிகமாக மகசூல் கிடைக்கிறது.
மேலும் களை எடுத்தல், பக்க கன்றுகளை அகற்றுதல் போன்ற பணிகள் குறைவதால் கூலியாட்கள் குறைந்து செலவும் மிச்சமாகின்றன.
பழங்களின் உற்பத்தி செலவினமும் கனிசமான அளவு குறைகிறது.
அமர்பாலி, மல்லிகா, நாசரி போன்ற ஒட்டு ரக மாங்கன்றுகளை 3 முதல் 5 மீட்டர் இடைவெளியிலும், கோ 3, பி. கே.எம்-4 ரக சப்போட்ட கன்றுகளை 5 முதல் 6 மீட் டர் இடைவெளியிலும், வாழை கன்றுகளை 1.8 க்கு 3.6 மீட்டர் இடைவெளியிலும் நடவு செய்து கூடுதல் மகசூல் பெறலாம்
இவ்வாறு விழுப்புரம் தோட்டக்கலை துணை இயக்குனர் பன்னீர் செல்வம், கோலியனூர் உதவி இயக்குனர் வீராசாமி தெரிவித்துள்ளனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வாழை சாகுபடியில் அடர் நடவு முறை
» வாழை சாகுபடியில் அடர் நடவு முறை
» மரவள்ளி கிழங்கு நாற்று முறையில் நடவு
» குழிநடவு முறையில் வெள்ளரி சாகுபடி
» குழிநடவு முறையில் வெள்ளரி சாகுபடி
» வாழை சாகுபடியில் அடர் நடவு முறை
» மரவள்ளி கிழங்கு நாற்று முறையில் நடவு
» குழிநடவு முறையில் வெள்ளரி சாகுபடி
» குழிநடவு முறையில் வெள்ளரி சாகுபடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum