கொய்யாவை தாக்கும் பூச்சிகளும் தடுக்கும் வழிகளும்
Page 1 of 1
கொய்யாவை தாக்கும் பூச்சிகளும் தடுக்கும் வழிகளும்
சேதத்தின் அறிகுறி:
புழுக்கள் காய்களில் துளையிட்டுச் சென்று உண்ணும், பின்பு
காய்ந்து பழுக்கும் முன்னரே விழுந்துவிடும்
பூச்சியின் விபரம்:
புழு பழுப்பு நிற தலையையும், இளஞ்சிவப்பு உடலில் சிறு மெல்லிய உரோமங்களையும் பெற்றிருக்கும்
தாய்ப்பூச்சி சிறியதாக மஞ்சள் நிற இறக்கையில் நிளைய கருப்புப் புள்ளிகளுடன் இருக்கும்
ஆண்பூச்சி உம்பின் பின்பகுதி நுணியில் கருமையான முடிக்கொத்தும் காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை:
தாக்கப்பட்ட பழங்களை எழுத்து அழித்து விடவும்
விளக்குப்பொறி 1 எக்டர் வைத்து தாய்ப்பூச்சியின் நடமாட்டத்தை கண்காணிக்கலாம்
மாலத்தியான் 50 இ.சி. 0.1 சதவிதம் (அ) என்டோசல்பான் 35 இ.சி 0.07 சதவிதம் மருந்தினை பூக்கும் தருணத்திலும் காய்ப்பிடிக்கும் தருணத்திலும் தெளிக்கவேண்டும்
2. பழ துளைப்பான், வீரச்சோளா ருசோக்கிரேட்டல்
சேதத்தின் அறிகுறி:
காய்கள் துளைக்கப்பட்டு விதைகள் சேதப்படுத்தப்பட்டிருக்கும்
பூச்சியின் விபரம்:
புழு அழுக்கடைந்த பழுப்பு நிறமாக சிறிய உரோமங்களுடன் இருக்கும்
தாய் வண்ணத்துப்பூச்சி நீலமும் பழுப்புமாக அழகான முன் சிறக்கைகளில் ஆரஞ்சு நிற புள்ளிகளுடன் காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை:
தாக்கப்பட்ட பழங்களை எடுத்து அழித்துவிட வேண்டும்
விளக்குப்பொறி 1 எக்டர் வைத்து தாய்ப்பூச்சியின் நடமாட்டத்தை கண்காணிக்கலாம்
மாலத்தியான் 50 இ.சி 0.1 சதவிதம் (அ) என்டோசல்பான் 35 இ.சி 0.07 சதவிதம்
பழ துளைப்பான்
சேதத்தின் அறிகுறி
புழுக்கள் பூ மொட்டுகளிலும் பழங்களிலும் காணப்படும்
பூச்சியின் அறிகுறி:
வண்ணத்துப்பூச்சி சிவப்பாக காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை:
தாக்கப்பட்ட பழங்களை எடுத்து அழித்துவிட வேண்டும்
விளக்குப்பொறி 1 எக்டர் வைத்து தாய்ப்பூச்சியின் நடமாட்டத்தை கண்காணிக்கலாம்
மாலத்தியான் 50 இ.சி 0.1 சதவிதம் (அ) என்டோசல்பான் 35 இ.சி 0.07 சதவிதம்
4. கொய்யாப்பழ ஈ
சேதத்தின் அறிகுறி:
புழுக்கள் மற்றும் ஈக்கள் பாதி கணிந்த பழங்களையே தாக்கும்
பழத்தின் மீது முட்டையிட துளைகள் காணப்படும்
பழத்திலிருந்து துர்நாற்றம் வீச துவங்கும்
பூச்சியின் விபரம்:
பூச்சியின் கால்கள் மஞ்சள் நிறமாகவும் இறக்கைகள் பழுப்பு நிறமாகவும் காணப்படும்
கட்டுப்படுத்தப்பட்ட முறை:
தாக்கப்பட்ட பழங்களை எடுத்து அழித்துவிட வேண்டும்
கோடை உழவு செய்து பழ ஈயின் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்
மெத்தில் யூணஜீனால் கவர்ச்சிப் பொறியை ஹெக்டர்க்கு பத்து வீதம் வைத்து பழ ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்
மெத்தில் யூஜீனால் மற்றும் மாத்தியான் 50 இ.சி 1:1 என்ற கலவையில் கலந்து கவர்ச்சிப் பொறியில் வைத்து ஈக்களை அல்லது மாலத்தின் 50 இ.சி 0.05 சதவிதம் மருந்தினை தெளிக்கலாம்
மொலஸஸ் அல்லது வெல்லத்தை 10 கிராம் / லிட்டர் கீழ்வரும் ஏதாவது ஒரு பூச்சி மருந்தினை இரண்டு முறை தெளிக்கவும்
பென்தியான் 100 இ.சி 1 மி.லி / லிட்டர்
மாலத்தியான் 50 இ.சி 2 மி.லி / லிட்டர்
டைமித்தோயேட் 30 இ.சி 1 மி.லி / லிட்டர்
(பழங்கள் பழுப்பதற்கு முன்னால் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை)
ஒப்பியல் காம்பன்ஜேட்டஸ், ஸ்பாலன்ஜியா பிலிப்பைனன்ஸிஸ், டையகாஸ்மிமார்பா கிரெளசி இவ்வொட்டுண்ணிகளை களத்தில் விட்டு பழ ஈயினை கட்டுப்படுத்தலாம்
5. மரப்பட்டைப்புழு
தாக்குதலின் அறிகுறிகள்:
பட்டை துளைப்பான் இளம் வயது மரங்களை அதிக அளவில் தாக்குகிறது
புழு மரப்பட்டையை துளைத்து உள்ளே சென்று வலைப்பின்னலை உருவாக்கி உணவுக் கடத்தும் திசுவை உண்கிறது
புழு இரவு நேரங்களில் மட்டும் மரப்பட்டையை உண்ணுகிறது பகல் நேரங்களில் மரத்துளைகளில் மறைந்து வாழ்கிறது
பூச்சியின் விபரம்:
புழு – பழுப்பு நிறத்தில் இருக்கும்
வண்டு – மஞ்சள் நிறமுடையது முன் இறக்கையில் பழுப்பு நிற கோடும், பின் இறக்கையில் வெண்ணிற பட்டைக்கோடு இருக்கும்
ஆண் வண்டு சிறியதாகவும் பெண் வண்டு பெரியதாகவும் இருக்கும்
6. தேயிலைகொசு
சேதத்தின் அறிகுறி
இலை மற்றும் பூங்கொத்துகளில் நுனிக்கருத்துகள் வாடிவிடும்
பூச்சி சாறு உறிஞ்சிய இடங்களில் ஈரமான பழுப்பு நிறக் கசிவு தெரியும்
பூச்சியின் விபரம்
செந்நிற உடலில் கருநிற தலையைக் கொண்ட மெல்லிய நாவாய்ப்பூச்சி
கட்டுப்படுத்தும் முறை:
தாக்கப்பட்ட பகுதிகளை சேகரித்து அழிக்கவும்
பூக்கும் தருணத்தில் மாதத்திற்கு இருமுறை மாலத்தியான் 50 இ.சி 0.2 சதவிதம் (அ) என்டோசல்பான் 35 இ.சி 0.07 சதவிதம் ஏதாவது ஒரு பூச்சிமருந்தினை தெளிக்கலாம்
7. பச்சை செதிள் பூச்சி
சேதத்தின் அறிகுறி:
குஞ்சுகளும் தாய்ப்பூச்சிகளும் இலைகளின் சாறுகளை உறிஞ்சும்
இலைகள் மஞ்சலாக மாறும்
பூச்சியின் விபரம்:
குஞ்சுகள் இளம் மஞ்சள் நிறத்தில் காணப்படும்
பூச்சிகள் தட்டையாகவும் மேற்பாகம் லேசாக குவிந்து மஞ்சள் கலந்த பச்சை நிறமாக இருக்கும்
கட்டுப்படுத்தும் முறை:
தாக்குதல் ஆரம்பிக்கும் பருவத்திலேயே கிளைகளை வெட்டி அழித்துவிட வேண்டும்
மானோகுரோட்டோபாஸ் 1 மி.லி / லிட்டர்
(அ )
இரண்டு வாரங்கள் கழித்து மரத்திற்கு 20 என்ற விகிதத்தில் கிர்டோலேமஸ் மான்ட்ரொஸரி பொரிவண்டை விடலாம்
பாஸ்போமிடான் 215 மிலி (அ) மானோகுரோட்டோபாஸ் 40 மிலி (அ) எண்டோசல்பான் 80 மிலி மருந்து தண்ணீருடன் கலந்து தெளித்தால் நாற்றங்காலில் செதில் பூச்சியின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்
நடவு வயலில் – பாஸ்போமிடான் 300 மிலி மானோகுரோட்டோபாஸ் 30 மிலி மருந்தைத் தெளிக்கவும்.
8. மாவுப்பூச்சி
சேதத்தின் அறிகுறி:
இலை மற்றும் காய்களின் மீது அடை அடையாக மாவு போன்று காணப்படும்
முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறமாக காணப்படும்
பூச்சியின் விபரம்:
பெண் பூச்சியின் பிற்பகுதியில் நீண்டவால் போன்று காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை:
முட்டை குவியலையும் குழுக்களையும் எடுத்து அழிக்க வேண்டும்
கூட்டமாக காணப்படும் புழுக்களை தீயிட்டு அழிக்க வேண்டும்
விளக்குப் பொறி வைத்து கவர்ந்து அழிக்கலாம்
மெதில் டெமட்டான் 25 இ.சி 0.05 சதவிதம்
(அ)
டைமீதோயேட் 30 இ.சி. 0.06
மரத்திற்கு 20 என்ற விகிதத்தில் கிர்ப்டோலேமஸ் மான்ட்ரொஸரி பொறிவண்டை விடலாம்
9. வெள்ளை ஈ, அலிரோடைக்கஸ் டிஸ்பர்சஸ்:
சேத்தின் அறிகுறி:
குஞ்சுகளும் தாய்ப்பூச்சிகளும் இலைகளில் உள்ள சாற்றை உறிஞ்சும்
பூச்சிகளின் தேன் போன்ற கழிவுப் பொருளின் படிவால் இலை மற்றும் பூங்கொத்துக்களில் கருமையான பூசணம் வளரும்
இலைகள் மஞ்சளாக மாறும்
தாக்கப்பட்ட இலைகள் உதிர்ந்துவிடும்
பூச்சியின் விவரம்:
சிறு வெண்ணிற பூச்சிகள் இலைகளில் அடை அடையாக மாவுப்பூச்சிகளைப் போன்று காணப்படும். அதிகாலையில் மிகவும் சுறுசுறுப்பாக காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை:
வயலை சுத்தமாக வைக்க வேண்டும்
களைகளை அகற்ற வேண்டும்
மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்
தாக்குதல் அதிகமாக இருந்தால் இமிடாகுளோப்ரிட் 200 எஸ்.எல் 0.01 சதவீதம் (அ) ட்ரை அசோபாஸ் 40 இ.சி. 0.06 சதவிதம் தெளிக்கலாம்
வேப்ப எண்ணெய் 3 சதவிதம் அல்லது வேப்பங்கொட்டை சாறு 5 சதவிதம் தெளிக்கலாம்
கிரிப்டோலேமஸ் மாண்டரொஸரி பொறிவண்டை விட்டு கட்டுப்படுத்தலாம்
என்கார்சியா ஷெய்டெரிஸ், என்கார்சியா காடெல்பே ஆகிய ஒட்டுண்ணிகளை விடலாம்
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மக்காச்சோளம் தாக்கும் பூச்சிகளும் தடுக்கும் வழிகளும்
» மக்காச்சோளம் தாக்கும் பூச்சிகளும் தடுக்கும் வழிகளும்
» வெங்காயத்தை தாக்கும் பூச்சிகளும் தடுக்கும் வழிகளும்
» உளுந்து பயிரை தாக்கும் பூச்சிகளும் தடுக்கும் வழிகளும்
» அல்சரின் அறிகுறிகளும் அதை குணப்படுத்துவதற்கான வழிகளும்!
» மக்காச்சோளம் தாக்கும் பூச்சிகளும் தடுக்கும் வழிகளும்
» வெங்காயத்தை தாக்கும் பூச்சிகளும் தடுக்கும் வழிகளும்
» உளுந்து பயிரை தாக்கும் பூச்சிகளும் தடுக்கும் வழிகளும்
» அல்சரின் அறிகுறிகளும் அதை குணப்படுத்துவதற்கான வழிகளும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum