கிளிக்-3'யாவது சதாவுக்கு திருப்புமுனையாக அமையுமா?
Page 1 of 1
கிளிக்-3'யாவது சதாவுக்கு திருப்புமுனையாக அமையுமா?
'ஜெயம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சதா. தொடர்ந்து 'அந்நியன்', 'திருப்பதி', 'உன்னாலே உன்னாலே' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதன்பிறகு தமிழ் சினிமாவை விட்டே சிலகாலம் காணாமல் போய் இருந்த சதா, மீண்டும் 'புலிவேஷம்' படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். ஆனாலும் அம்மணிக்கு தமிழில் வேறு எந்த படமும் கிளிக் ஆகவில்லை. இந்நிலையில் இந்தியில் வெளிவந்த 'கிளிக்' படம், தமிழில் 'கிளிக்-3' என்ற பெயரில் உருவாகியுள்ளது. கே.ஜி.எஸ்.புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பாக சாய்குமார், சலாடி சந்தோஷ்குமார், காரூக் கௌதம்குமார் ஆகிய மூவரும் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப்படத்தில் நாயகனாக ரித்தேஷ் தேஷ்முக்(ஜெனிலியா கணவரேதான்) நடித்துள்ளார். அவருடன் சதா, சினேகா உல்லல், ரியா சென் ஆகிய மூவரும் நடித்துள்ளனர். படத்தில் சதா இதுவரை இல்லாத அளவுக்கு படு கிளாமராக நடித்துள்ளார். அவர் மட்டுமல்லாது சினேகா உல்லல், ரியா சென் ஆகியோரும் கிளாமராக நடித்துள்ளனர். ரித்தேஷும், சினேகா உல்லலும் உயிருக்கு உயிராக காதலிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டு பிரிந்து விடுகின்றனர். அந்த வேதனையில் சினேகா உல்லல் தற்கொலை செய்து கொள்கிறார். அதன்பின்னர் ரித்தேஷும்-சதாவும் காதலிக்கிறார்கள். அவர்களை இறந்துபோன சதா ஆவியாக வந்து அவர்களது காதலை தடுக்கிறார். கடைசியில் என்ன ஆனது என்பதுதான் மீதிக்கதை. காதலும், ஆவியின் மிரட்டலுமாக படத்தை மிரட்டலாக இயக்கி இருக்கிறார் சங்கீத் சிவன். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அமையுமா போக்கிரி கூட்டணி?
» குரு பலம் ! இருந்தால் மட்டும் தான் திருமணம் அமையுமா
» குரு பலம் ! இருந்தால் மட்டும் தான் திருமணம் அமையுமா கேள்வி :
» குரு பலம் ! இருந்தால் மட்டும் தான் திருமணம் அமையுமா
» குரு பலம் ! இருந்தால் மட்டும் தான் திருமணம் அமையுமா கேள்வி :
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum