கொடி வகை காய்கறிகள் பயிர் இடுவது எப்படி
Page 1 of 1
கொடி வகை காய்கறிகள் பயிர் இடுவது எப்படி
தோட்டக்கலைதொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கொடி வகை காய்கறிகளை பயிரிட்டு, அதிக லாபம் பெறலாம் என, தோட்டக்கலை உதவி இயக்குனர் அனிலாகிங்ஸி தெரிவித்தார்.அவர் கூறியதாவது:
கொடிவகை பயிர்களான பாகற்காய், புடலங்காய், பீர்க்கன் காய் வகை காய்கறி பயிர்கள் செய்யலாம். தற்போது பாகற்காயில் விவேக், அபிஷேக், ப்ரித்தி ஆகிய ரக விதைகள், புடலங்காய் கோ-1, கோ-2, பிகேஎம்-1, எம்டியு பிஎல்ஆர்(எஸ்ஜி-1) ஆகிய ரக விதைகள், பீர்க்கன்காய் கோ-1, கோ-2, அர்கா சுமீத் மற்றும் அர்கா சுஜாத் ஆகிய ரக விதைகளை விதைக்கலாம்.
தொழு உரம்நிலங்களை நன்கு உழவு செய்து சமன் செய்த பின், 2.5 அடி அகலத்திற்கு இரண்டுமீட்டர் நீளம்இடைவெளியில் குழிகளை தோண்ட வேண்டும்.
இவற்றில், 30க்கு 30 செ.மீ., அளவில் ஆழம் இருக்கும் அளவிற்கு குழிகள் அமைத்து, 10 நாட்கள் ஆறப்போட
வேண்டும்.
ஒவ்வொரு குழிக்கும் மக்கிய தொழு உரம், 10 கிலோ இட வேண்டும். மேலும் அடியுரமாக ஒவ்வொரு குழிக்கும் 6:12:12 என்கிற அளவில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்து கலவையை, 100 கிராம் அளவிற்கு இட வேண்டும்.
பூ பூக்கும் தருணத்தில் ஒவ்வொரு குழிக்கும் 10 கிராம் தழை சத்தை இடவேண்டும்.
பாகற்காய் விதை ஒரு எக்டருக்கு4.5 கிலோ, புடலங்காய் விதை 1.5 கிலோ, பீர்க்கன்காய் விதை 1.5 கிலோ விதைகளை, ஒரு கிலோ விதைக்கு கேப்டான் அல்லது திரம் மருந்து 2 கிராம் என்ற அளவிற்கு கலந்து 24 மணி நேரம் வைத்த பின், விதைக்க வேண்டும்.
ஒரு குழியில், நான்கு விதைகள் விதைக்க வேண்டும். நன்கு வளர்ந்தவுடன், குழிக்கு இரண்டு செடிகள் வீதம் விட்டு, மீதம் உள்ள செடிகளை நீக்கி விட வேண்டும்.
விதைகள் முளைக்கும்வரையில் தண்ணீர் வாரம் ஒரு முறை பாய்ச்ச வேண்டும். பின்னர் களை நீக்க வேண்டும்.
கொடி படர, மூங்கில் தட்டிகள் 2 மீட்டர் உயரத்திற்கு அமைக்க வேண்டும். இவற்றில் கொடி படருமாறு செய்ய வேண்டும்.
எத்ரல் கரைசலை இரு இலைகள் விட்ட பின், வாரம் ஒரு முறை தெளித்தால் ஆண் பூக்கள் எண்ணிக்கை குறைந்து, பெண் பூக்கள் அதிகரிக்கும்.
இவற்றில், புடலங்காய்க்கு ஒரு மில்லி எக்ரல் 10 லிட்டர் நீரிலும், ஏனைய பயிர்களுக்கு 2.5 மி.லிட்டர் மருந்தை 10 லிட்டர் நீரிலும் கலக்க வேண்டும்.
சாம்பல் நோய் கட்டுப்படுத்த டை நோ காபர் ஒரு மில்லி அல்லது கார்பன்டைசிம் 0.5 கிராம் மருந்தை, ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
அடி சாம்பல் நோய் கட்டுப்படுத்த மான்கோசெப் அல்லது குளோரோதளானில் இரண்டு கிராம், ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 10 நாட்கள் இடைவெளி விட்டு தெளிக்க வேண்டும்.
60 நாட்களில் அறுவடை இந்த நுட்பத்தில் பாகற்காய் மற்றும் பீர்க்கன்காய்களை 60நாட்களில் இருந்து ஒரு வாரம் வரையில் அறுவடை செய்யலாம்.
புடலங்காய் 80 நாட்களில் இருந்து அறுவடை செய்யலாம். இவற்றின் மூலம் 14 டன் பாகற்காய், 18 டன் புடலங்காய், 14 டன் பீர்க்கங்காய் அறுவடை செய்யலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கொடி வகை காய்கறிகள் பயிர் இடுவது எப்படி

» கத்தரி பயிர் இடுவது எப்படி?
» இயற்கை வழியில் நிலக்கடலை பயிர் இடுவது எப்படி?
» ← உளுந்து புது பயிர்: த வே ப க – வம்பன் 6 தென்னையில் வாடல் நோயை கட்டுபடுத்துவது எப்படி? → வாழையில் வாடல்நோய்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum