கல்வியைப் பொறுத்தமட்டில் ஜோதிட ரீதியாக எவ்வாறு பார்க்கிறீர்கள்?
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
கல்வியைப் பொறுத்தமட்டில் ஜோதிட ரீதியாக எவ்வாறு பார்க்கிறீர்கள்?
தங்களுடைய பிள்ளைகளை மருத்துவராகவோ, பொறியாளராகவோ மென்பொருள் நெறிஞராகவோதான் ஆக வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புகின்றனர். அதாவது வருவாயைத் தரக் கூடிய கல்விக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது.
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் கல்வி ஆர்வத்தின் மீது கவனம் செலுத்த மறுக்கிறார்கள். கல்வியைப் பொறுத்தமட்டில் ஜோதிட ரீதியாக எவ்வாறு பார்க்கிறீர்கள்?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்
கல்வி என்பது ஆய்விற்குட்பட்ட ஒரு விஷயம். சங்க காலத்தில் கல்வியில் புத்திமானாவான், பண்டிதனாவான், கணிதத்தில் வல்லவனாவான், நிபுணனாவான் என்றெல்லால் சொல்வார்கள். இப்பொழுது கல்வி வானளாவ வளர்ந்துள்ளது.
பொதுவாக புதன் கிரகமே கல்விக்குரியவன். அதாவது வித்தைக்குரியவன். கற்றல் என்பது எந்தத் துறையாக வேண்டுமானாலும் இருக்கலாம். மேற்கொண்டு கற்க வேண்டும் என்கின்ற எண்ணத்தைக் கொடுப்பதே புதனாவான்.
லக்னத்தில் இருந்து 2வது வீட்டில் என்ன கிரகம் அமைந்துள்ளதோ அதைப் பொறுத்து குழந்தைக்கு ஆரம்பக் கல்வி அமையும். 4வது இடம் அல்லது வீடு உயர் கல்வியை குறிக்கக் கூடியது. 9வது இடம் மேற்படிப்பை குறிக்கக் கூடியது. இது ஆராய்ச்சிக் கல்வி (பி.ஹெச்டி.) வரை சொல்லலாம். ஆக 2, 4, 9 இடங்களைப் பொறுத்துதான் கிரகங்களின் செயல் இருக்கும். இந்த இடங்களுக்கான கிரகம் வந்து சுப கோள்களுடன் சேர்ந்திருப்பது அல்லது சுப ஆதிபத்யம் பெற்ற கிரகங்களுடன் சேர்ந்திருப்பது பொறுத்து கல்வி வாய்ப்பு அமையும்.
என்னிடம் வந்த ஒரு பெற்றோர் 3 தலைமுறையா கணவன்-மனைவி மருத்துவர்களாக இருந்து வந்துள்ளார்கள்.. இப்ப அவங்களுடைய மகனையும், மகளையும் மருத்துவராக ஆக்கணும்னு எம்.பி.பி.எஸ். படிக்க வைக்கறாங்க. அவர்களும் படித்து முடித்தார்கள். ஆனால் நடந்ததென்ன? அந்தப் பையன் ஸ்பேஸ் ரிசர்ச் தொடர்பான கல்வி கற்கப் போய்விட்டான். அந்தப் பொண்ணும் மருத்துவராகவில்லை. ஜர்னலிசத்திற்கு சென்றுவிட்டார்.
எனவே, என்னதான் தாய், தந்தையர் வற்புறுத்தினாலும், காலப்போக்கில் இவர்களுடைய கிரக அமைப்பிற்கு தகுந்தார் போலதான் யு.ஜி.ல என்ன பண்ணியிருந்தாலும், பி.ஜி.ல கிரக அமைப்பு ஒத்து வந்தால் மட்டுமே மேற்படிப்பு தொடரும். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்ச எவ்வளவோ பேர் எம்.பி.ஏ. படிச்சு துறை மாறியிருக்காங்க. நம்முடைய கிளைண்ட்ல நிறைய பேர் முதல்ல காசு வர்ற துறைனு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சிட்டு, அப்புறம் ·பாரின் போய் எம்.பி.ஏ. படிச்சு மாறியிருக்காங்க.
ஆகவே, துறையைத் தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் முக்கியமான விஷயம். அதுதான் ஒரு குழந்தையுடைய வெற்றின்னு நாம சொல்லலாம்.
webdunia photo WD
தாய் தந்தையர் பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை சொல்லிக் கொடுப்பது போல, அவங்க எந்தத் துறையில ஷைன் பண்ணுவாங்கன்னு தெரிஞ்சு சேர்த்துவிட்டாங்கன்னா அதுதான் அவங்களுடைய பெரிய குறிக்கோளாக இருக்கும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» பொறு புறக்கணி புறப்படு
» தியாக தீபம்
» தியாக உணர்ச்சி மிகுந்தது
» எச் ஐ வியை முழுமையாக குணமாக்கும் சாத்தியம்'
» ரஜினியின் புதிய பட விவகாரம்! கே.வியை கத்தரித்தது ஏ.ஜி.எஸ்!!
» தியாக தீபம்
» தியாக உணர்ச்சி மிகுந்தது
» எச் ஐ வியை முழுமையாக குணமாக்கும் சாத்தியம்'
» ரஜினியின் புதிய பட விவகாரம்! கே.வியை கத்தரித்தது ஏ.ஜி.எஸ்!!
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum