காராமணி சாகுபடி
Page 1 of 1
காராமணி சாகுபடி
காராமணியை குளிர்காலம் மற்றும் கடும் மழை பெய்யும் காலம் இவைகளைத் தவிர்த்து இதர மாதங்களில் சாகுபடி செய்யலாம்.
காராமணி ஆடி-ஆவணிப் பட்டத்தில் மானாவாரி நிலங்களை மழையை நம்பி சாகுபடி செய்யப்படுகின்றது.
சிறிய அளவில் சாகுபடி செய்ய குச்சி நட்டு அதன்மேல் படர விடலாம். பொதுவாக தரையில் வளரும்படியே இதனை சாகுபடி செய்யப்படுகிறது.
காய்கறி வகை காராமணியில் சாகுபடிக்கு ஏற்ற இரண்டு ரகங்கள் உள்ளன. என்.எஸ்.634 என்ற ரகம் நல்ல பசுமை நிறத்துடன் காணப்படும். இதன் காய்கள் ஒன்றரை அடி நீளம் கொண்டதாக இருப்பதோடு பார்ப்பதற்கு உருண்டு காணப்படும். இதில் சதைப்பற்று குறைவாக இருப்பினும் நாரே கிடையாது. காய்கள் சுவையாக இருக்கும்.
அடுத்து என்.எஸ்.620 ரகம் பார்ப்பதற்கு வெளிர்பச்சை நிறத்தில் இருக்கும். காய்கள் கயிறு போல் நீளமாக இருக்கும். காய்கறி வகை காராமணி ரகங்கள் மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது. நுகர்வோர்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். தேவையான அளவு புரதச்சத்து உள்ளது.
காய்கறி வகை காராமணி சாகுபடியானது மிகவும் சுலபமாக உள்ளது. காற்றிலுள்ள தழைச்சத்தினை தனது வேர் முடிச்சுகளில் சேகரித்து வைத்துக்கொள்ளும் திறன் பெற்ற இந்த பயிர் அதிக அளவு ரசாயன உரங்களும், இயற்கை உரங்களும் இல்லாமலே நல்ல வளமான மண்ணில் சாகுபடி செய்யப்படுகின்றது.
சாகுபடி முறை:
சாகுபடிக்கு தேர்ந்தெடுத்த மண் நல்ல வடிகால் வசதியைக் கொண்டிருக்க வேண்டும்.
நிலத்தை கட்டிகள் இல்லாமல் உழுது இயற்கை உரங்களை இடலாம்.
இயற்கை உரங்களை இடுவதற்கு முன் அவைகளில் உள்ள கண்ணாடிகள், கற்கள் மற்றும் இதர கலப்படங்களை அகற்றிவிட்டு உரத்தினை நன்கு பொடிசெய்துவிட்டு சாகுபடி நிலத்தின்மீது சீராகத் தூவவேண்டும்.
உடனே எருக்கள் நிலத்தில் மண்ணோடு நன்கு கலக்க உழவேண்டும். உழுவது மிக ஆழமாக இல்லாமல் எருவினை மண்ணோடு நன்கு கலக்கும்படி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
விவசாயிகள் சொந்தமாக தயாரித்த உரங்களை ஏக்கருக்கு 5 டன் வரை இடலாம்.
சாகுபடி நிலத்தில் போதிய வளம் இல்லாத சூழ்நிலையில் உழவு செய்யப்பட்ட பின், விதைப்பதற்கு முன் அடி உரமாக யூரியா 25 கிலோ, சூப்பர் 125 கிலோ மற்றும் பொட்டாஷ் 35 கிலோ இவைகளை ஒன்றாக கலந்து ஒரு ஏக்கர் நிலத்திற்கு இடவேண்டும்.
மறுபடியும் உழவு செய்துவிட்டு இரண்டு அடி இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும். இவ்வாறு தயார்செய்த பாரில் அரை அடி இடைவெளியில், விதையினை வரிசையில் ஊன்ற வேண்டும்.
விதை சீராக முளைப்பதற்கு பாசனம் கொடுப்பதோடு, அடுத்துவரும் பாசனங்களை கவனமாக கொடுக்க வேண்டும்.
பாசனம் சமயம் நீர் தேங்குமளவிற்கு செய்யக்கூடாது.
பயிர் சீராக வளர்ச்சிபெற வாரத்திற்கு இரு முறை பாசனம் தரவேண்டும்.
பயிரில் களை எடுப்பதற்கு நல்ல கவனம் கொடுக்க வேண்டும்.
நிலத்தை கொத்திவிடும்போது மேலாக செதுக்க வேண்டும். அதிக ஆழமாக செய்யக்கூடாது.
செடிகள் வளரும்போது குச்சி நட்டு அதன் மேல் படர விடலாம். இதனால் காய்களை சுலபமாக அறுவடை செய்யலாம்.
விதை நட்ட 60 நாட்களுக்கு பிறகு அறுவடை வரும்.
காய்கள் பராமரிப்பு பணியைப் பொறுத்து ஒன்றரை முதல் இரண்டு அடி நீளத்தை காய்கள் அடையும்.
பொருளாதாரம்: இந்தப்பயிரை அரை ஏக்கரில் (50 சென்ட்) சாகுபடி செய்ய ரூ.6,650 செலவாகும். அரை ஏக்கர் மகசூலின் மதிப்பு ரூ.12,000 (ரூ.1,500 x , அரை ஏக்கரில் லாபம் ரூ.5,350.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum