விஸ்வரூப'த்திலிருந்து இஷா ஷெர்வானி விலகினாரா?!
Page 1 of 1
விஸ்வரூப'த்திலிருந்து இஷா ஷெர்வானி விலகினாரா?!
கமல் நடிக்கும் 'விஸ்வரூபம்' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. பெரும் பகுதி காட்சிகள், அமெரிக்காவில் எடுக்கப்பட்டு வருகின்றன. கமலஹாசனே இயக்குகிறார். இதில், கதாநாயகிகளை முடிவு செய்வது ஆரம்பத்தில் இருந்தே பிரச்சினையாக இருந்து வருகிறது. இதில் இரு நாயகிகள் அதில் ஒருவராக இந்தி நடிகை சோனாக்ஷி சின்காவை தேர்வு செய்தனர். கமலின் மனைவி கேரக்டரில் அவர் நடிப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் சோனாக்ஷி திடீரென படத்தில் இருந்து விலகி விட்டார். அவருக்கு பதில் தீபிகா படுகோனே, சோனம் கபூர், வித்யா பாலன், சமீரா ரெட்டி, அனுஷ்கா என பலரை பரிசீலித்து இறுதியாக பூஜா குமார் தேர்வானார். அவர் தற்போது கமலுடன் நடித்துக்கொண்டு இருக்கிறார். இரண்டாவது நாயகியாக நடிக்க ஸ்ரேயாவிடம் பேசினர். பின்னர் இஷா ஷெர்வானி (பிரபல இந்தி நடிகை) தேர்வானார். நடனத்தில் நிபுணத்துவம் பெற்றவர். கமல், இஷா ஷெர்வானி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க ஏற்பாடுகள் நடந்தன. இந்த நிலையில் இஷா ஷெர்வானி திடீரென படத்தில் இருந்து விலகி விட்டார். இது குறித்து அவர் கூறும்போது, 'விஸ்வரூபம்' படத்தில் கமலுடன் நடிக்க அவர் அலுவலகத்தில் இருந்து என்னை தொடர்பு கொண்டு பேசினர். கமலுடன் நடிக்க போவதை நினைத்ததும் ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனால் அப்படத்தில் நடிக்க தேதி ஒத்து வரவில்லை. எனவே அதில் இருந்து விலகி விட்டேன். மீண்டும் அவருடன் நடிக்க வாய்ப்பு வரும் என்று நம்புகிறேன் என்றார். எப்டி என்னதாங்க பிரச்சினை...?! ஒரே மர்மமாத்தான் இருக்கு போங்க....
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஸ்ருதி இடத்தில் இலியானா! விலகினாரா!! விலக்கப்பட்டாரா?
» "டேவிட்’ படத்தில் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி வேடம்: இஷா ஷெர்வானி
» "டேவிட்’ படத்தில் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி வேடம்: இஷா ஷெர்வானி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum