தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தேசிய விருது: மகிழ்ச்சியில் 'வாகை சூட வா' இயக்குநர்!

Go down

தேசிய விருது: மகிழ்ச்சியில் 'வாகை சூட வா' இயக்குநர்! Empty தேசிய விருது: மகிழ்ச்சியில் 'வாகை சூட வா' இயக்குநர்!

Post  ishwarya Tue Mar 19, 2013 3:53 pm

தமிழில் சிறந்த படமாக தேர்வு பெற்ற 'வாகை சூடவா' படத்தின் டைரக்டர் சற்குணம் கூறியதாவது:- நேர்மையாகவும் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் எடுத்த படம் இது. இந்த படத்துக்கு தேசிய விருது கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன். மக்களுக்கு இன்னும் நல்ல கருத்துக்களை கொடுக்கவேண்டும் என்ற உத்வேகத்தை இந்த விருது எனக்கு கொடுத்து இருக்கிறது. தவறு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக, சின்னச்சின்ன விஷயங்களைகூட அந்த படத்தில் மிகநுட்பமாக செய்து இருந்தேன். ஒரு நகரம் உருவாவதற்கு செங்கற்கள் தேவைப்படுகின்றன. ஆனால் அந்த செங்கல் உருவாவதற்கு இயற்கை அழிக்கப்படவேண்டிய நிலை ஏற்படுகிறது. 'வாகை சூட வா' படத்தில் குழந்தை தொழிலாளர் உள்பட சில விழிப்புணர்வான கருத்துக்களையும், காதலையும் 'சென்டிமென்ட்' கலந்து கொடுத்து இருந்தேன். இந்த படத்துக்கு விருது கிடைத்து இருப்பதை மிக மிகப் பெருமையாக கருதுகிறேன். அறிமுக இயக்குநருக்கான இந்திராகாந்தி விருது பெறும் 'ஆரண்ய காண்டம்' படத்தின் இயக்குநர் குமாரராஜா தியாகராஜன், சமுதாயத்தில் இருண்ட பகுதியை சித்தரிக்கும் இதுபோன்ற படங்களுக்கு அங்கீகாரம் கிடைத்து இருப்பது மகிழ்ச்சியையும் வியப்பையும் அளிப்பதாக தெரிவித்தார். சிறந்த ஒளிப்பதிவு, இசை மற்றும் இந்த படத்தின் நடிகர்களுள் ஒருவரான சோமசுந்தரத்துக்கும் விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். படம் கமர்ஷியலா இல்லையேனு கவலைப்பட்டவர்களுக்கு உண்மையிலேயே இந்த தேசிய விருது மிகவும் சந்தோஷத்தை அளிக்கக்கூடியதுதான். சாருக்கு இப்போ நூறு கப் சாக்லெட் ஹார்லிக்ஸை ஒரே மடக்குல குடிச்ச மாதிரி இருந்திருக்குமே!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தேசிய திரைப்பட விருதுகள் – சிறந்த இயக்குநர் பாலா – நான் கடவுளுக்கு 2 விருது
» தேசிய விருது அறிவிப்பு: சிறந்த நடிகை வித்யாபாலன் – சிறந்த தமிழ் படம் வாகை சூட வா
» பால்கே விருது பெற்றார் பாலச்சந்தர்… தனுஷ், சரண்யா, சீனு ராமசாமிக்கு தேசிய விருது!
» ‘வாகை சூடவா’ படத்துக்கு இந்தியன் பனோராமா விருது
» சுனைனாவுக்கு தேசிய விருது…?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum