தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறை

Go down

நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறை Empty நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறை

Post  meenu Tue Mar 19, 2013 2:04 pm

நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறை மூலம் ஒரு எக்டருக்கு 249 டன் கரும்பு மகசூல் பெறலாம் என தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழக சோதனைத் திடல்கள் மூலம் கண்டறியப் பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மொத்த சாகுபடி பரப்பு 3.06 லட்சம் எக்டரில் சராசரி விளைச்சல் எக்டருக்கு 105 டன் ஆகும்.
ஆனால் நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையை பின்பற்ற தொடங்கியபின், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சாகுபடி அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்ட விவசாயி ஒருவர் ஒரு ஏக்கருக்கு 93.8 டன் கரும்பு மகசூல் பெற்று சாதனை படைத்துள்ளார்.
எனினும் அவர் இரண்டு கணுக்கள் உள்ள கரணைகளை
விதைத்ததால் போக்குவரத்திற்கு அதிகமாக செலவு செய்துள்ளார்.
ஆனால் நீடித்த நிலைத்த சாகுபடியில் ஒரு கணு கரணை பயிரிடும் முறைமூலம் 250 கிலோ கரணைகள் மட்டும் ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தி உற்பத்தி செலவுகளை குறைக்கலாம்.
மரபாக கரும்பு பயிரிடும் விவசாயிகளும் இந்த நவீன முறையை கற்று பயன்பெறலாம்.
விவசாயிகள் ஜே 86032 கரும்பு ரகத்தைப் பயிரிட்டு வருகின்றனர். இந்த ரகம் சிவப்பு வேர் அழுகல் நோய் தாக்கக்கூடியது.
புதிய கரும்பு ரகங்களான கோ.சி.24, எஸ்.ஜே.7 ஆகிய ரகங்களைப் பயிரிட வேண்டும்.
கோ.சி.24 ரகம் அதிக விளைச்சலாக எக்டருக்கு 228 கரும்பு மகசூல் தருகிறது.
நீடித்த நிலைத்த சாகுபடி முறை மூலம் எக்டருக்கு 300-350 டன் மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது.இந்த ரகம் இயந்திர அறுவடைக்கு உகந்தது.
மேலும் இந்த ரகத்திலிருந்து 12 சதவீதம் சர்க்கரை உற்பத்தி செய்யலாம்.
களர் மண்ணில் வளரும் இயல்புடையது.
எஸ்.ஜே.7 ரகத்தில் 13.6 சதவீதம் சர்க்கரை உற்பத்தி செய்யலாம்.ஆனால் தற்போது உள்ள ரகங்களிலிருந்து சர்க்கரை ஆலைகளில் 10 சதவீதம் மட்டுமே சர்க்கறை பெறப்பட்டு வருகிறது.
உழவர்கள் சொட்டு உரப்பாசன முறையைப் பயன்படுத்தி சிக்கன நீர் நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum