எள் பயிரில் அறுவடைக்கு பின் நேர்த்தி
Page 1 of 1
எள் பயிரில் அறுவடைக்கு பின் நேர்த்தி
எள் பயிரில் நல்ல லாபம் பெற அறுவடைக்கு பின் நேர்த்தி தொழில் நுட்பங்களை பின்பற்ற வேண்டும் என கோட்ட வேளாண்மை அலுவலர் தெரிவித்துள்ளார்.
]எண்ணெய் வித்து பயிரான எள்ளில் எண்ணெய் அளவு குறையாமலும், தரம் கெடாமல் காத்திடவும், நல்ல நிலையில் விற்றிடவும் கீழ்கண்ட நேர்த்தி முறைகளை அறுவடைக்கு பின் செய்ய வேண்டும்.
எள் பயிர் அறுவடையின் போது செடியின் கீழ் பகுதியிலுள்ள இலைகளில் 25 சதவீதம் இலைகள் உதிர்ந்தும் மேலே உள்ள இலைகள் மற்றும் தண்டு பகுதிகள் மஞ்சள் நிறமாக மாறியிருக்க வேண்டும்.
எள் காய்கள் பாதி அளவு மஞ்சள் நிறம் அடைந்து விட்டால் பயிர் அறுவடை செய்ய ஏற்ற பருவமாகும்.
பயிரின் கீழ் பகுதியில் இருந்து 10வது காயை உடைத்துப் பார்த்தால் உள்ளே இருக்கும் விதைகள் கருப்பு நிறமாக மாறியிருந்தால் அறுவடை செய்து விடலாம்.
வெள்ளை எள் பயிருக்கு எள் விதை வெள்ளை நிறம் அடைய வேண்டும்.
மேலே கூறிய நிலையைத் தாண்டி அறுவடை செய்தால் எள் காய்கள் வெடித்து விதைகள் சிதறி சேதம் அடையும்.
எள் பயிரைத் தரை மட்டத்தில் அறுத்து எடுக்க வேண்டும்.
செடியின் மேல் பகுதியை உள்புறமும், அடிபாகம் வெளிப்புறமும் இருக்கும்படி வைத்து வட்ட வடிவமாக திறந்த வெளியில் அடுக்கி வைக்க வேண்டும்.
அடுக்கிய எள் செடியில் உள்ள காய்கள் ஒட்டு மொத்தமாக முதிர்ச்சி அடைய மேல் பகுதியில் வைக்கோல் போட்டு மூடி வைக்க வேண்டும்.
மூன்று நாட்கள் கழித்து எள் பயிரை எடுத்து களத்தில் காயப்போட வேண்டும்.
மூன்று முதல் ஐந்து நாட்கள் காயவைத்து பின் விதைகளை தனியே பிரித்தெடுக்க வேண்டும்
இவ்வாறு விருத்தாசலம் கோட்ட வேளாண்மை அலுவலர் அமுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நெல் அறுவடைக்கு பின் நேர்த்தி தொழிற் நுட்பங்கள்
» மஞ்சள் அறுவடைக்கு பின் தொழில்நுட்பம்
» நிலக்கடலை விதை நேர்த்தி
» நிலக்கடலை விதை நேர்த்தி
» மானாவாரி நிலங்களில் விதை நேர்த்தி
» மஞ்சள் அறுவடைக்கு பின் தொழில்நுட்பம்
» நிலக்கடலை விதை நேர்த்தி
» நிலக்கடலை விதை நேர்த்தி
» மானாவாரி நிலங்களில் விதை நேர்த்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum