தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரேஸூக்கும் அஜித்துக்கும் சம்பந்தமே இல்லை: விஷ்ணுவர்தன்

Go down

ரேஸூக்கும் அஜித்துக்கும் சம்பந்தமே இல்லை: விஷ்ணுவர்தன் Empty ரேஸூக்கும் அஜித்துக்கும் சம்பந்தமே இல்லை: விஷ்ணுவர்தன்

Post  ishwarya Tue Mar 19, 2013 1:20 pm

அஜித் - விஷ்ணுவர்தன் இணையும் படம் குறித்து தினம் ஒரு தகவலாக வலம் வந்து கொண்டிருந்தன. சமீபத்தில் அஜித் - விஷ்ணுவர்தன் இணையும் படம் இந்தி படமான 'ரேஸ்' படத்தின் ரீமேக் என்றும், அதில் அஜித்தின் தம்பியாக ஆர்யா நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் இத்தகவலை மறுத்திருக்கிறார் விஷ்ணுவர்தன். இது குறித்து விஷ்ணுவர்தன் கூறியிருப்பது: "நாங்கள் இப்போது படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம். படத்தின் கதைக்கு ஏற்றவாறு தலைப்பை பரிசிலீத்து வருகிறோம். படத்தைப் பற்றிய செய்தியை கொடுக்கும் போது நல்ல ஒரு தலைப்போடு கொடுக்கலாம் என்று நாங்கள் அமைதியாக இருக்கும் காரணத்தால் படத்தினைப் பற்றி பல்வேறு தகவல்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. கண்டிப்பாக நாங்கள் இணையும் படம் 'ரேஸ்' படம் அல்ல என்பது மட்டும் உறுதி. 'ரேஸ்' கதைக்கும் எனது கதைக்கும் சம்பந்தம் இல்லை. 'பில்லா-2' படப்பிடிப்பில் இருக்கும் போதே எனது படத்தின் கதை கூறி பேசி முடிவு செய்து விட்டோம். நான், அஜித் சார், ஏ.எம்.ரத்னம் சார் மூன்று பேரும் சேர்ந்து தேர்வு செய்த கதை இது. சுரேஷ் மற்றும் பாலா (சுபா) இருவரும் எனக்கு திரைக்கதை அமைக்க உதவி செய்து வருகிறார்கள். இப்போதைக்கு எனது படக்குழுவில் கேமராமேன் நீரவ் ஷா 'தாண்டவம்' படத்தில் பணியாற்றி வருவதால் இப்படத்தில் பணியாற்றவில்லை. மற்றபடி யுவன், எனது மனைவி அனுவர்தன் உள்ளிட்ட அனைவரும் இப்படத்தில் பணியாற்ற இருக்கிறார்கள். எனது தெலுங்கு படமான 'பஞ்சா' படத்தில் பணியாற்றிய வினோத் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருக்கிறார்". ஆரம்பிச்சிட்டாங்கய்யா அடுத்த ஆட்டத்த....!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum