நம்ம வீட்டுக் கல்யாணம்' ஷில்பாவுக்கு கண்ணாலம்!
Page 1 of 1
நம்ம வீட்டுக் கல்யாணம்' ஷில்பாவுக்கு கண்ணாலம்!
விஜய் டிவியில் சைலண்டாக ரேட்டிங் அள்ளும் நிகழ்சிகளில் ஒன்று 'நம்ம வீட்டு கல்யாணம்' பிரபலங்களின் திருமண வீடியோ என்பதால் அந்த நிகழ்ச்சி மிகவும் பிரபலம். தமிழ் சினிமா நட்சத்திரங்கள் முதல் மற்ற துறைகளில் இருந்தும் பல பிரபலங்களின் திருமண நிகழ்வுகளை தரமான ஒளிப்பதிவு மூலம் இந்த நிகழ்ச்சியை திட்டமிட்டு படம் பிடிக்கிறது விஜய் டிவி டீம்! இந்த நிகழ்ச்சியை ஷில்பா கடந்த 150 எபிசோடுகளுக்கும் மேல் தொகுத்து வழங்கி வருகிறார். எதிர்பாராத ஆச்சர்யமாக வரும் மார்ச் 25- தேதி ஒளிபரப்பாகும் நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சியில் இடம்பெறவிருக்கும் திருமணம் ஷில்பாவினுடையது! இவருக்கும் பரத் என்பவருக்கும் இந்தூரில் திருமணம் நடைபெற்றது. வரவேற்பு கேரளா மற்றும் சென்னையில் நடைபெற்றது. வெவ்வேறு மாநிலங்களில் நடைபெற்ற திருமண முறைகள் மற்றும் வரவேற்பு நிகழ்வுகள் வரும் ஞாயிறு மாலை 5.30 மணிக்கு நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிறதாம்! சினிமா பிரபலங்கள் முதல் சின்னத்திரை பிரபலங்கள் வரை வந்து இந்த திருமண நிகழ்ச்சியில் ஷில்பாவுக்காக கலந்துகொண்டிருகிறார்கள். இம்முறை ஷில்பா 'இது நம்ம வீட்டுக் கல்யாணம்' என்று சொல்ல முடியாது! ஊர் திருவிழாக்களுக்கெல்லாம் கெட்டி மேளம் கொட்டுனீங்க.. ஒங்களுக்கு..?!
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகை ரீமா சென்னுக்கு நாளை கண்ணாலம்!
» கருணாநிதியின் கோபம்… ஜெயலலிதாவின் பாசம்! – கலங்கி நெகிழும் நம்ம தல; அஜீத் வீட்டு வரவேற்பறையில், காபி வித் அஜீத்
» விதவிதமா வரப்போறார் நம்ம இளையதளபதி !
» நம்ம குஷ்பு ஐ.நா. கூட்டத்தில் பேசப் போறாருங்கோ..!!
» ஹீரோதான் நம்ம லட்சியம்-’பசங்க’ ஸ்ரீராம் அதிரடி!
» கருணாநிதியின் கோபம்… ஜெயலலிதாவின் பாசம்! – கலங்கி நெகிழும் நம்ம தல; அஜீத் வீட்டு வரவேற்பறையில், காபி வித் அஜீத்
» விதவிதமா வரப்போறார் நம்ம இளையதளபதி !
» நம்ம குஷ்பு ஐ.நா. கூட்டத்தில் பேசப் போறாருங்கோ..!!
» ஹீரோதான் நம்ம லட்சியம்-’பசங்க’ ஸ்ரீராம் அதிரடி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum