உயிர் உரங்கள் தென்னையில் அதிக விளைச்சல்
Page 1 of 1
உயிர் உரங்கள் தென்னையில் அதிக விளைச்சல்
தென்னைக்கு உயிர் உரங்கள் இட்டால் 20 சதவீத அதிக விளைச்சல் கிடைக்கும் என்று, சுல்தான்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.மனோகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளது:
தென்னை மரங்களுக்கு உயிர் உரங்கள் இடுவதன் மூலமாக வேர் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கலாம்.
இதனால் வறட்சியைத் தாங்கும் சக்தி அதிகரிக்கும்.
அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபேக்டீரியா போன்ற உயிர் உரங்கள், மண்ணில் உள்ள தழை, மணிச் சத்துகளை விரயமின்றி பயன்படுத்த உதவும்.
உயிர் உரங்களை இடுவதால் விளைச்சல் 20 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
விவசாயிகள் தங்களுக்குத் தேவையான உயிர் உரங்களை சுல்தான்பேட்டை வேளாண்மை விரிவாக்க மையத்தில் பாக்கெட்டுக்கு ரூ.6 செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். ஏக்கருக்கு ரூ.120 செலவில் விளைச்சல் 20 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மேலும், இந்தாண்டு வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளதால் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டு சில இடங்களில் தென்னை மரங்கள் காய்ந்து விடக்கூடிய நிலை உள்ளது.
இதனால், விவசாயிகள் முன்கூட்டியே திட்டமிட்டு தங்களது தோட்டங்களில் உள்ள தென்னைகளுக்கு உரிய காப்பீடு செய்வதன் மூலமாக வறட்சியால் இழப்பு ஏற்படும்பட்சத்தில் உரிய நிவாரணம் பெறலாம்.
இதற்காக, மரத்துக்கு ஆண்டுக்கு ரூ.2-க்கும் குறைவான பிரீமியத் தொகை செலுத்த வேண்டும். அரசு சார்பில் மீதமுள்ள பிரீமிய தொகை செலுத்தப்படும். விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டால் காப்பீட்டு நிறுவனங்கள் மூலமாக உரிய இழப்பீடு வேளாண்மைத் துறையால் பெற்றுத்தரப்படும். ஏற்கெனவே காப்பீடு செய்த விவசாயிகள், தங்களது காப்பீட்டை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு உதவி வேளாண்மை அலுவலர்கள் அல்லது சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உயிர் உரங்கள் தென்னையில் அதிக விளைச்சல்

» நெற்பயிருக்கு உயிர் உரங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum