தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மந்த்ராவின் மறு பிரவேசம்!

Go down

மந்த்ராவின் மறு பிரவேசம்! Empty மந்த்ராவின் மறு பிரவேசம்!

Post  ishwarya Tue Mar 19, 2013 11:46 am

தொடை அழகி ரம்பாவைப் போல ஒரு அங்கத்தின் அழகியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் மந்த்ரா. சென்னை பெண்ணான இவர் தனது 14 வயதிலேயே நடிக்க வந்தவர். 1995-ல் 'பிரியம்' என்ற படத்தின் மூலம் மந்த்ரா கதாநாயகி ஆனார். 'தேடினேன் வந்தது', 'கல்யாண கலாட்டா', 'சிம்மாசனம்' 'கங்கா கௌரி', 'லவ்டுடே' உள்பட தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் 75-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தார். 2004-ம் ஆண்டில் மந்த்ரா, சீனிவாஸ் என்ற (தெலுங்கு) உதவி டைரக்டரை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப்பின் மந்த்ரா நடிக்கவில்லை. சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். இப்போது அவருக்கு மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்து இருக்கிறது. இதுபற்றி மந்த்ரா கூறுகிறார்:- "திருமணத்துக்குப்பின் என் உடம்பு குண்டாகி விட்டது. கடந்த 7 வருடங்களாக, சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தேன். இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. அதற்கு காரணம் இருக்கிறது. முதலில், சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும். எனக்கு இப்போது 30 வயதுதான் ஆகிறது. குழந்தை பெற்றுக்கொள்வதற்கு இன்னும் வயது இருக்கிறது. வீட்டை கட்டி முடித்துவிட்டு, குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். அதற்கிடையில், மீண்டும் நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்து இருக்கிறேன். முன்பு போல் எனக்கு கதாநாயகி வாய்ப்பு தரமாட்டார்கள் என்று எனக்கு தெரியும். இப்போது வரும் இளம் கதாநாயகர்களுக்கு அம்மாவாக நடிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. மற்ற கதாநாயகர்களுக்கு அக்காவாக அல்லது அண்ணியாக நடிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். மறுபிரவேசத்துக்காக, 89 கிலோவாக இருந்த என் உடம்பை 69 கிலோவாக குறைத்து விட்டேன். நான், சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவள் என்பதால், நன்றாக தமிழ் பேசுவேன். அதனால், மும்பை கதாநாயகிகளுக்கு 'டப்பிங்' பேச அழைப்பு வருகிறது. அதையும் ஏற்றுக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்." கிரஹபிரவேசத்துக்காக ஒரு மறுபிரவேசமா....?!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum