வெள்ளரிக்காய் மோர் கூட்டு
Page 1 of 1
வெள்ளரிக்காய் மோர் கூட்டு
தேவையான பொருட்கள்:
வெள்ளரிக்காய் – 1
தயிர்- 1 கப்
தேங்காய்த்துருவல்- 1/2 கப்
பச்சைமிளகாய் - 1 அல்லது 2
சீரகம் – 1/2 டீஸ்பூன்
உப்பு – 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
தாளிக்க:
நல்லெண்ணெய்- 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
காய்ந்தமிளகாய் – 1
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
வெள்ளரிக்காயை, தோல், விதை மற்றும் உள்ளிருக்கும் வெள்ளைப் பகுதியை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
தேங்காய், பச்சைமிளகாய், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
வெள்ளரிக்காய்த் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, மூடி மிதமானத்தீயில் வேக விடவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. காயிலுள்ள் நீர்ச்சத்திலேயே வெந்து விடும். அரை வேக்காடு வெந்தால் போதும். குழைய விடக்கூடாது.
இதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது மற்றும் உப்பு சேர்த்து, இலேசாகக் கிளறி விட்டு, ஓரிரு வினாடிகள் அடுப்பில் வைத்திருந்து, சற்று கொதித்தவுடன், கீழே இறக்கி வைக்கவும். கூட்டு சற்று ஆறியதும், அதில் தயிரை நன்றாகக் கடைந்துச் சேர்த்துக் கலக்கவும்.
பின்னர் அதில், கடுகு, வெந்தயம், பெருங்காயம், மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்துக் கொட்டவும்.
இந்தக் கூட்டை, சுரைக்காய், வெள்ளைப் பூசணிக்காய் ஆகியவற்றை உபயோகித்தும் செய்யலாம்.
காரமான குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» வெள்ளரிக்காய் மோர் கூட்டு
» வெள்ளரிக்காய் கடலைப்பருப்பு கூட்டு
» வெள்ளரிக்காய் மசாலா மோர்
» வெள்ளரிக்காய் கடலைப்பருப்பு கூட்டு
» வெள்ளரிக்காய் கூட்டு
» வெள்ளரிக்காய் கடலைப்பருப்பு கூட்டு
» வெள்ளரிக்காய் மசாலா மோர்
» வெள்ளரிக்காய் கடலைப்பருப்பு கூட்டு
» வெள்ளரிக்காய் கூட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum