காலிப்ளவர் உருளைக்கிழங்கு சப்ஜி
Page 1 of 1
காலிப்ளவர் உருளைக்கிழங்கு சப்ஜி
தேவையானப்பொருட்கள்:
உருளைக்கிழங்கு-200கிராம்
காலிப்ளவர் – 200 கிராம்
வெங்காயம்- பெரியது 1
தக்காளி- சிறியது 1
மல்லி,கறிவேப்பிலை- சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1டீஸ்பூன்
கரம் மசாலா – கால் ஸ்பூன்
நல்லெண்ணெய்- 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
செய்முறை:
உருளைகிழங்கை தோல் சீவி சிறிய துண்டாக்கி கொள்ளவும், காலிப்ளவரை சிறிய இதழாக்கி வெந்நீரில் அலசி எடுக்கவும். குக்கரில் காலிப்ளவர், உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, உப்பு, அரைகப் தண்ணிர் சேர்த்து வைக்கவும். பிரட்டியது போல் இருக்கவேண்டும்.
அனைத்தையும் கலந்து குக்கரில் 2 விசில் வைத்து உடன் அடுப்பை அணைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை போட்டு வெடிக்கவும், குக்கரில் வேகவைத்த உருளை, காலிப்ளவரை போட்டு பிரட்டவும். நறுக்கிய மல்லி இலை தூவவும்.
கமகமக்கும் காலிப்ளவர் உருளைக்கிழங்கு சப்ஜி ரெடி. இது பூரி , சப்பாத்திக்கு அருமையாக இருக்கும். தக்காளி சேர்க்காமலும் செய்யலாம். சாதத்திற்கும் தொட்டு சாப்பிடலாம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» காலிப்ளவர் உருளைக்கிழங்கு சப்ஜி
» காலிப்ளவர் உருளைக்கிழங்கு சப்ஜி
» உருளைக்கிழங்கு காலிப்ளவர் வறுவல்
» உருளைக்கிழங்கு காலிப்ளவர் வறுவல்
» உருளைக்கிழங்கு காலிப்ளவர் வறுவல்
» காலிப்ளவர் உருளைக்கிழங்கு சப்ஜி
» உருளைக்கிழங்கு காலிப்ளவர் வறுவல்
» உருளைக்கிழங்கு காலிப்ளவர் வறுவல்
» உருளைக்கிழங்கு காலிப்ளவர் வறுவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum