பரங்கிக்காய் எரிசேரி
Page 1 of 1
பரங்கிக்காய் எரிசேரி
தேவையான பொருள்கள்:
பரங்கிக்காய் = அரை கிலோ
பச்சை மிளகாய் = 6
மஞ்சள் பொடி = சிறிதளவு
கடுகு = அரை ஸ்பூன்
சீரகம் = அரை ஸ்பூன்
வெங்காயம் = 3
தேங்காய் = அரை மூடி
எண்ணெய் = 3 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
பரங்கிக்காயை தோல் சீவி அரையங்குல துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ளவும். இதையும், மஞ்சள் பொடியையும் பரங்கிக்காயோடு கலந்து 5 நிமிடம் வைக்கவும். இது தானாகவே சிறிது தண்ணீர் விடும். இந்த தண்ணீரை அகற்றி விடவும்.
பாதி தேங்காயை சீரகத்தோடு சேர்த்து அரைக்கவும். வெங்காயம் நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு நீர் வடித்த பரங்கிக்காயை போட்டு உப்பு சேர்த்து வதக்கி அரைத்த தேங்காயையும் சேர்க்கவும். பரங்கிக்காயை தண்ணீர் வற்றி மெத்தென்று வேகும் வரை வைக்கவும்.
வேறு ஒரு பேனில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகை தாளித்து மீதி தேங்காய் பூ சேர்த்து வறுத்து அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கி அதனோடு வெந்த பரங்கிக்காயை சேர்த்து மசித்துக் கொள்ளவும்.
சுவையான பரங்கிக்காய் எரிசேரி தயார். இதை ரைஸ், பரோட்டா, நூடுல்ஸ் போன்றவற்றோடு பரிமாறலாம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum