வாழைக்காய் மீல்மேக்கர் கூட்டு
Page 1 of 1
வாழைக்காய் மீல்மேக்கர் கூட்டு
தேவையான பொருள்கள்:
வாழைக்காய் = 2
மீல்மேக்கர் = 100 கிராம்
பச்சை மொச்சை = 100 கிராம்
பச்சை மிளகாய் = 5
இஞ்சி = காலங்குலம்
பூண்டு = 10 பல்
தேங்காய் = அரை மூடி
தனியா பொடி = அரை ஸ்பூன்
தக்காளி = 2
தயிர் = அரை கப்
மிளகாய் வற்றல் = 2
புதினா = அரை கட்டு
பட்டை = 2
கிராம்பு = 2
பிரிஞ்சி இலை = 1
ஜாதிக்காய் பொடி = 1 சிட்டிகை
எண்ணெய் = அரை கரண்டி
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
வாழைக்காயை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். மீல்மேக்கர் அளவிற்கு நறுக்கினால் சரியாக இருக்கும். மீல்மேக்கரை சிறிது நேரம் ஊற விட்டுப் பின் அலசிப் பிழியவும். பச்சை மொச்சையை உரித்து கொள்ளவும். இஞ்சி, பூண்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
தேங்காய், பச்சை மிளகாய், தக்காளி அரைத்து கொள்ளவும். புதினாவை ஆய்ந்து கொள்ளவும்.
வாணலியில் பாதி எண்ணெய் விட்டு முதலில் ஊறவிட்டுப் பிழிந்து வைத்திருக்கும் மீல்மேக்கரை பொரித்து எடுக்கவும். இதை எடுத்து விட்ட பின் இஞ்சி, பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.
இதை வதக்கிய பின் அரைத்த தேங்காய் மசாலாவைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து தனியா பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்.
பிறகு வாழைக்காய், மொச்சை பருப்பு, பொரித்த மீல்மேக்கர் சேர்த்து வதக்கி அரை கப் நீர் விட்டு மூடி வைத்து 10 நிமிடம் வேக விடவும். இடையில் ஓரிரு முறை கிளறி இறக்கவும்.
பேனில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, மிளகாய் வற்றல் தாளித்து கொட்டவும்.
சுவையான வாழைக்காய் மீல்மேக்கர் கூட்டு தயார். இதை ரைஸ், பூரி, ரோல்ஸ், சமோசா சப்பாத்தி, நூடுல்ஸ் போன்றவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
வாழைக்காய் குறைவான சர்க்கரை அளவு கொண்டது. சோடியம் குறைவாக மற்றும் வைட்டமின் A, பொட்டாசியம், மற்றும் நார்சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதிக ஊட்டச்சத்து மிக்கது. மலச்சிக்கல் குறையும்.
உடல் எடை, இரத்த அழுத்தம், இரத்த சோகை ஆகியவை குறையும். எலும்புகள் ஆரோக்கியம் பெறும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» வாழைக்காய் மீல்மேக்கர் கூட்டு
» வாழைக்காய் மீல்மேக்கர் கூட்டு
» வாழைக்காய் பச்சைப்பயறு கூட்டு
» வாழைக்காய் பச்சைப்பயறு கூட்டு
» வாழைக்காய் கடலைப்பருப்பு கூட்டு
» வாழைக்காய் மீல்மேக்கர் கூட்டு
» வாழைக்காய் பச்சைப்பயறு கூட்டு
» வாழைக்காய் பச்சைப்பயறு கூட்டு
» வாழைக்காய் கடலைப்பருப்பு கூட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum