தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கே.எஸ்.ஆர். இல்ல விழாவில் ரஜினி-கமல் பங்கேற்பு!

Go down

கே.எஸ்.ஆர். இல்ல விழாவில் ரஜினி-கமல் பங்கேற்பு! Empty கே.எஸ்.ஆர். இல்ல விழாவில் ரஜினி-கமல் பங்கேற்பு!

Post  ishwarya Mon Mar 18, 2013 6:08 pm

ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களை வைத்து படங்களை இயக்கியவர் கே.எஸ்.ரவிக்குமார். இவரது மகள் ஜனனி மற்றும் சென்னை தொழிலதிபரின் மகன் ஆர்.சதீஷ்குமார் என்பவருக்கும் திருமணம் செய்வதாக முடிவு செய்யப்பட்டது. இன்று கே.எஸ்.ரவிக்குமாரின் இல்லத்தில் மிகவும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அடுத்த மாதம் 3-ஆம் தேதி மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் வெகுவிமரிசையாக திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமலஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கே.எஸ்.ரவிக்குமார் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில், சௌந்தர்யா இயக்கும் 'கோச்சடையான்' படத்தின் மேற்பார்வை இயக்குநராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் விசேஷம்.. ம்ம்.. அசத்துங்க......

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» திரையுலகினர் நாளை உண்ணாவிரதம்: ரஜினி, கமல் பங்கேற்பு
» ஏப் 14-ல் கேப்டன் டிவி துவக்கவிழா: ரஜினி, கமல், டோணி பங்கேற்பு!
» கருணாநிதி தலைமையில் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு பாராட்டு விழா! – ரஜினி, கமல் பங்கேற்பு
» ஜெ. கலந்து கொண்ட முதல் சினிமா விழா… ரஜினி, கமல் பங்கேற்பு!
» சென்னையில் இயக்குனர் சங்கம் சார்பில் நட்சத்திர கலை விழா: ரஜினி, கமல் பங்கேற்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum