தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐ.பி.எல். முடிந்ததும் 'பில்லா 2'!

Go down

ஐ.பி.எல். முடிந்ததும் 'பில்லா 2'! Empty ஐ.பி.எல். முடிந்ததும் 'பில்லா 2'!

Post  ishwarya Mon Mar 18, 2013 1:55 pm

அஜித், பார்வதி ஓமணகுட்டன் ஜோடியாக நடிக்கும் படம் 'பில்லா 2'. சக்ரி டோலட்டி இயக்குகிறார். வெளிநாடுகளில் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ளது. தற்போது இறுதி கட்ட பணிகள் நடக்கின்றன. சாதாரண இளைஞனை சூழ்நிலைகள் எவ்வாறு பயங்கர தாதாவாக மாற்றுகிறது என்பதே கதை. 'பில்லா' படம் வெற்றிகரமாக ஓடியதால் அதன் இரண்டாம் பாகத்துக்கும் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. கடைசியாக ரிலீசான அஜித்தின் 'மங்காத்தா' படமும் வசூல் குவித்தது. எனவே 'பில்லா 2' படத்தை அதிக விலை கொடுத்து வாங்கி வெளியிட பெரிய பட நிறுவனங்கள் ஆர்வம் காட்டின. தற்போது தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் ரூ. 28 கோடிக்கு படத்தை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் விளம்பரத்துக்காக ரூ. 2 கோடி வரை செலவு செய்யப்படும் எனத் தெரிகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் முடிந்ததும் ஜூன் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. மே 1-ந்தேதி பாடல் சி.டி.யை பிரமாண்ட விழா நடத்தி வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதில் அஜித் படத்தின் நாயகிகள் பார்வதி ஓமணக்குட்டன், புரூனா அப்துல்லா ஆகியோர் பங்கேற்கின்றனர். ஏற்கனவே 'பில்லா 2' படத்தின் டிரெய்லர்கள் இணைய தளங்களில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ளது. தியேட்டர்களிலும் டிரைலர் திரையிடப்பட்டு வருகின்றன. ஐ.பி.எல்-ல பார்த்து பம்முதாக்கும் தல......?!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum