சமையல்:வெந்தயக்கீரை மீன் குழம்பு
Page 1 of 1
சமையல்:வெந்தயக்கீரை மீன் குழம்பு
வெந்தயக்கீரையின் கசப்புத்தன்மை குழந்தைகளுக்கு பிடிக்காது. ஆனால் அவைகள் நமது உடல் சூட்டை தனித்து நமக்கு குளிர்ச்சி அளிப்பவை. ஆகையால் இந்த கீரையை மீன் குழம்புடன் சேர்த்து சமைக்கும் போது, மீன் குழம்பின் சுவை அதிகரிப்பதோடு, உப்பு, புளி, காரம் சரியான பக்குவத்தில் சேர்த்தால் கீரையின் கசப்புத்தன்மையே தெரியாமல் குழந்தைகள் கூட சாப்பிட்டு விடுவார்கள்!
தேவையான பொருட்கள்:
வஞ்சிரமீன் - 1/2 கிலோ
வெங்காயம் 200 கிராம்
தக்காளி - 350 கிராம்
தக்காளி பேஸ்ட் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் 2 டீ ஸ்பூன்
தனியாத்தூள் 2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள், சீரகத்தூள் தலா - 1/2 டீ ஸ்பூன்
உப்பு - ருசிக்கு தேவையான அளவு
வெந்தயம் - 1 டீ ஸ்பூன்
வெந்தயக்கீரை சிறிய கட்டு - 1
புளி ஒன்னறை சிறிய லெமன் சைஸ்
தாளிக்க:
நல்லெண்ணை - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு, சீரகம், சோம்பு, மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 6 பெரிய பல்
கருவேப்பிலை - ஒரு கைப்பிடி
தேங்காய் பவுடர் (அ) தேங்காய் பத்தை - 4 ஸ்பூன் (அ) 4 பத்தை
கொத்துமல்லி தழை - அரை கைப்பிடி
செய்முறை:
* மீனை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக போடவும்.
* வெந்தயத்தை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
* வெந்தய கீரையை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி தண்ணீரை வடிக்கவும்.
* தக்காளியை மையாக அரைத்து வைக்கவும்.
* தாளிக்க கொடுத்துள்ளவைகளை எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், சோம்பு, மிளகு சேர்த்து தாளித்து, பூண்டை தட்டி போட்டு வதக்கி, கருவேப்பிலை சேர்த்து, 2 நிமிடம் வதக்கவும்.
* வெங்காயத்தை பொடியாக அரிந்து போட்டு வதக்கவும்.
* வெங்காயம் வதங்கியதும் எல்லா மசாலா தூள் வகைகள், ஊறிய வெந்தயம், வெந்தயக்கீரை, தக்காளி பேஸ்ட் போட்டு நன்கு 2 நிமிடம் வதக்கவும்.
* அரைத்த தக்காளியை சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.
* பிறகு புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி சேர்க்கவும்.
* 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
* கடைசியாக மீனையும் தேங்காயையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
* கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்.
* சுவையான மணமான மருத்துவ குணம் நிறைந்த மேத்தி மீன் குழம்பு ரெடி.
குறிப்பு: வெந்தயமும், நல்லெண்ணையும் சேருவதால் வயிற்றுக்கு எந்த உபாதையும் அளிக்காது. உடல் சூட்டை தணிக்கும் குழம்பு. ப்ளெயின் ரைஸ், ரொட்டி, தோசை, ஆப்பம், குஸ்கா, அனைத்துக்கும் பொருந்தும்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெந்தயக்கீரை மீன் குழம்பு
» சமையல்:விறால் மீன் குழம்பு
» சமையல்:மீன் உருண்டை குழம்பு
» நெத்திலி மீன் குழம்பு
» விறால் மீன் குழம்பு
» சமையல்:விறால் மீன் குழம்பு
» சமையல்:மீன் உருண்டை குழம்பு
» நெத்திலி மீன் குழம்பு
» விறால் மீன் குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum