தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சமையல்:முருங்கை பெப்பர் சிக்கன்

Go down

சமையல்:முருங்கை பெப்பர் சிக்கன் Empty சமையல்:முருங்கை பெப்பர் சிக்கன்

Post  ishwarya Mon Mar 18, 2013 12:53 pm



மட்டன்ல முருங்கைக்காய் சேர்த்து சமைச்சிருக்கோம். ஆனா, எப்படி சிக்கன்லனு யோசிக்கிறீங்களா.... அட! ஆமாங்க.... சிக்கன்ல சேர்த்து சமைச்சு பாருங்க.. சும்மா சூப்பரா இருக்கும். பின்ன என்ன...இந்த சம்மருல வந்திருக்கும் விருந்தாளிகளுக்கும் செஞ்சு கொடுத்து அசத்திட வேண்டியதுதானே.......

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
முருங்கைக்காய் - 4
வெங்காயம் - 200 கிராம்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி, பூண்டு - 1 டீ ஸ்பூன் (விழுதாக்கியது)
சீரகம் - 1 டீ ஸ்பூன்
மிளகுத் தூள் - 4 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 6
கொத்தமல்லி இலை - 1 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 1 குழிக்கரண்டி

செய்முறை:

* சிக்கனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். முருங்கைக் காயையும் துண்டுகளாக்கவும்.

* ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

* பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக்காய் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கி, சிறிது நீர் சேர்க்கவும்.

* இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து சிக்கனையும் அதில் போட்டு மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

* சிக்கன், முருங்கைக்காய் நன்கு வெந்ததும், மிளகுத் தூளைச் சேர்த்துக் கிளறவும்.

* நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum