சமையல்:கார்ன் ஓட்ஸ் பிஸ்கட்
Page 1 of 1
சமையல்:கார்ன் ஓட்ஸ் பிஸ்கட்
பிஸ்கட்டில் எத்தனையோ வகையான பிஸ்கட்டெல்லாம் சாப்ட்ருப்பீங்க... கார்ன் ஓட்ஸ் பிஸ்கட் சாப்ட்ருக்கீங்களா... எளிதில் செய்யக்கூடிய மாலை நேர ஸ்நாக்ஸான இந்த பிஸ்கட்டை செஞ்சு சும்மா அசத்துங்க.......
தேவையான பொருட்கள்:
கார்ன் - 1 கப்
ஓட்ஸ் - 1/2 கப்
பிரெட் துண்டுகள் - 3
மசாலா தூள் - 1/2 டீ ஸ்பூன்
உப்பு = சிறிதிளவு
எண்ணைய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* கார்னை தனியாக வெட்டிக் கொள்ளவும். (அல்லது Frozen கார்ன்கூட பயன்படுத்தலாம். (Fresh Corn என்றால் நல்லா இருக்கும்.)
* ஓட்ஸினை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். அத்துடன் பிரெட் துண்டுகளையும் சேர்த்து மிக்ஸியில் பொடித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
* கார்னினை மிக்ஸியில் போட்டு ஒன்றும் பாதியுமாக அரைத்துக் கொள்ளவும்.
* அரைத்த கார்ன், பொடித்த ஓட்ஸ், பிரெட் துண்டுகள், மசாலா தூள், உப்பு, எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
* இந்த கலவையினை விரும்பிய வடிவத்தில் தட்டி ட்ரேயில் வைத்து கொள்ளவும்.
* அவனை 400 F-ல் மூற்சூடு செய்து கொள்ளவும்.
* பிஸ்கட்டுகளை அவனில் 400 F-ல் 10 நிமிடங்கள் வேகவிடவும்.
* பிறகு பிஸ்கட்டுகளை திருப்பிவிட்டு மேலும் 7-8 நிமிடங்கள் வேகவிடவும்.
* சுவையான எளிதில் செய்யக்கூடிய ஹெல்தியான பிஸ்கட் ரெடி.
குறிப்பு:
* கார்னில் நிறைய தண்ணீர் இருப்பதால், தனியாக தண்ணீர் சேர்க்க தேவையில்லை.
* Whole Grains Bread பயன்படுத்தினால் ரொம்ப நல்லது.
* அவரவர் விருப்பம் போல காரத்தினை சேர்த்து கொள்ளலாம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கார்ன் ஓட்ஸ் பிஸ்கட்
» சமையல்:ஓட்ஸ் பகலாபாத்
» சமையல்:ஓட்ஸ் கேசரி
» சமையல்:ஓட்ஸ் பொங்கல்
» சமையல்:ஓட்ஸ் கிரீம் கஞ்சி
» சமையல்:ஓட்ஸ் பகலாபாத்
» சமையல்:ஓட்ஸ் கேசரி
» சமையல்:ஓட்ஸ் பொங்கல்
» சமையல்:ஓட்ஸ் கிரீம் கஞ்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum