கொத்தவரைக்காய் பொரியல்
Page 1 of 1
கொத்தவரைக்காய் பொரியல்
தேவையான பொருள்கள்:
கொத்தவரைக்காய் = 250 கிராம்
வெங்காயம் = 2
மிளகாய் வற்றல் = 3
இஞ்சி = சிறிதளவு
மஞ்சள் பொடி = சிறிதளவு
தேங்காய் = கால் மூடி
கடுகு = அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
கொத்தவரைக்காயை ஆய்ந்து பொடியாக நறுக்கவும். வெங்காயம் பொடியாக நறுக்கவும். இஞ்சியை தோல் நீக்கி தட்டிக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கிள்ளிய மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். இதனோடு தட்டிய இஞ்சியையும் சேர்க்கவும்.
அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கி கொத்தவரைக்காயை சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும். மஞ்சள் பொடி சேர்க்கவும். அரை கப் தண்ணீர் விட்டுப் பின் மூடி வைத்து 10 நிமிடம் வேக விடவும்.
நடுவில் ஓரிரு முறை கிளறி விடவும். இல்லாவிட்டால் அடியில் கருகி விடும். கடைசியாக துருவிய தேங்காய் சேர்த்து பரிமாறவும்.
சுவையான கொத்தவரைக்காய் பொரியல் தயார். இதை ரைஸ், சப்பாத்தியோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
கொத்தவரைக்காயில் புரதம், ஃபைபர், ஊட்டச்சத்துகள் அதிகம் இருப்பதால் இது நீரிழிவு நோய்களை கட்டுப்படுத்தும். உடல் எடையை குறைக்கிறது.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» கொத்தவரைக்காய் பொரியல்
» கொத்தவரைக்காய் பொரியல்
» கொத்தவரைக்காய் உசிலி
» கொத்தவரைக்காய் உசிலி
» கொத்தவரைக்காய் உசிலி
» கொத்தவரைக்காய் பொரியல்
» கொத்தவரைக்காய் உசிலி
» கொத்தவரைக்காய் உசிலி
» கொத்தவரைக்காய் உசிலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum