தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

லண்டன் ரசிகர்களை ஈர்த்த பீச் வாலிபால்!

Go down

லண்டன் ரசிகர்களை ஈர்த்த பீச் வாலிபால்! Empty லண்டன் ரசிகர்களை ஈர்த்த பீச் வாலிபால்!

Post  meenu Sun Mar 17, 2013 1:44 pm



0


ஒலிம்பிக் போட்டியில் பீச் வாலிபால் போட்டிகள் தொடங்கியுள்ளன. முதல் நாளிலேயே ஏகப்பட்ட கூட்டம். மகளிர் போட்டிகளைக் காணத்தான் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியிருந்தது.

விளையாட்டுப் போட்டிகளிலேயே மிகவும் கவர்ச்சிகரமானது என்ற பெயரைப் பெற்ற விளையாட்டு பீச் வாலிபால் போட்டிதான். அதிலும் மகளிர் போட்டிக்குத்தான் செம கூட்டம் கூடும். அதே போல லண்டன் ஒலிம்பிக் போட்டியிலும் பீச் வாலிபால் போட்டிக்குத்தான் நிறைய டிக்கெட் விற்பனையாகியிருந்தது.

தற்போது பீச் வாலிபால் போட்டிகள் தொடங்கியுள்ளன. முதல் நாளிலேயே பெரும் கூட்டம் கூடியது. ஹார்ஸ் கார்ட்ஸ் பரேட் மைதானத்தில் இந்தப் போட்டிகள் நடைபெறுகிந்றன. 19 டிகிரி அளவுக்கு குறைந்த வெப்ப நிலை நிலவியபோதும், அதைப் பொருட்படுத்தாமல் ரசிகர்கள் வீராங்கனைகளை ரசிக்கவும், விளையாட்டைப் பார்க்கவும் கூடியிருந்தனர்.

நல்லவேளையாக வீராங்கனைகள் வழக்கம் போல குறைந்த ஆடைகளுடன்தான் ஆடினர். கடும் குளிர் காரணமாக அவர்கள் பிரேசியர், பாண்டீஸுக்குப் பதில், லெக்கிங்ஸ் அணியலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் யாரும் லெக்கிங்ஸ் போடவில்லை.

முன்னதாக ஆண் பெண் நடனக்காரர்கள் இணைந்து நீச்சல் உடையில் டான்ஸ் ஆடி போட்டியைத் தொடங்கி வைத்ததை ரசிகர்கள் வெகுவாக கண்டு ரசித்தனர்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum