தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கடன் பிரச்னை தீர்க்கும் சோழீஸ்வரர்

Go down

 கடன் பிரச்னை தீர்க்கும் சோழீஸ்வரர் Empty கடன் பிரச்னை தீர்க்கும் சோழீஸ்வரர்

Post  amma Fri Jan 11, 2013 12:25 pm


கடன் பிரச்னை தீர்க்கும் சோழீஸ்வரர்

கருத்துகள்


 கடன் பிரச்னை தீர்க்கும் சோழீஸ்வரர் Tamil-Daily-News-Paper_38225519658
:55

ay

08









Diet Mocktail


You need to upgrade your Adobe Flash Player to watch this video.

Get Adobe Flash player


திருவெள்ளியங்குடி

தஞ்சை
மாவட்டத்தில், திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரி ஆற்றுக்கு வடப்புறமும்
மண்ணியாறு என்கிற பொன்னி நதிக்கு தென்புறமும் இருக்கிறது, திரு
வெள்ளியங்குடி. 108 வைணவ திவ்ய தேச தலத்தில் 42வது தலம். இத்தலத்துக்கு
அருகே அமைந்திருக்கிறது சௌந்தரவல்லி சமேத சோழீஸ்வரர் திருக்கோயில்.
இக்கோயிலை மயன் என்கிற தேவ சிற்பி நிர்மாணித்தார் என்கிறது தலவரலாறு.
மகாபலி சக்கரவர்த்தியிடம் வாமன கோலத்தில் வந்து மூன்றடி மண்ணை தானமாகக்
கேட்டார், மகாவிஷ்ணு. அப்பொழுது அசுரகுருவான சுக்கிராச் சாரியார்
வந்திருப்பது மகாவிஷ்ணு என்பதை புரிந்து கொண்டு தானம் கொடுப்பதைத் தடுக்க
முனைந்தார். வண்டு உருவம் கொண்டு, நீர் வார்க்கும் கமண்டலத்தில் நுழைந்து,
தண்ணீர் வரும் வழியை அடைத்தார்.

உடனே ஒரு தர்ப்பைப் புல்லை
எடுத்து தடுக்கும் வண்டின் மீது குத்தினார், வாம னர். தர்ப்பை
சுக்கிராச்சாரியார் கண்ணில் பட்டு அவரது பார்வை பறிபோனது. விண்ணையும்
மண்ணையும் இரண்டடியால் அளந்த பரந்தாமன், மகாபலியிடம் மூன்றாவது அடிக்கு
இடம் கேட்க, தன் சிரசையே அளித்து அமரத்து வம் பெற்றான் மகாபலி. பார்வை
இழந்த சுக்கிராச்சாரியார் தனக்கு பார்வை திரும்ப யாது பரிகாரம் என வேண்ட,
‘‘48 நாட்கள் எம்முடைய திருத்தலத்தில் தங்கி காலையும் மாலையும் எம்மையும்
அருகே அருள்புரியும் பரமேஸ்வரனையும் வழிபட, இழந்த பார்வையை மீண்டும்
பெறலாம்’’ என்று அருளினார் திருமால். உடனே சுக்கிராச்சாரியார்,
திருக்கோயிலுக்கு மேற்கே ஒரு குளம் வெட்டினர்.

அந்தத்
திருக்குளத்துக்கு சுக்கிர தீர்த்தம் என பெயரிட்டு, தினமும் அதில் நீராடி,
பரந்தாமனையும் அருகேயே கோயில் கொண்டுள்ள பரமனையும் வணங்கினார். ஒரு மண்டல
வழிபாட்டுக்குப் பிறகு பரந்தாமன், பரமனுடன் அவருக்குக் காட்சி தந்து
கண்ணொளி அருளினார்கள். அன்று முதல், தை மாதம் சங்கராந்தி அன்று ஈசனின்
திருமேனியை தன் கிரணத்தால் சுக்கிரன் வழிபடுகிறார் என்கிற நம்பிக்கை
நிலவுகிறது. இந்த தலம் சுக்கிரத் தலமாகவும் விளங்குகிறது. இந்த சோழீஸ்வரரை
காஞ்சி மகாப்பெரியவர் ஒரு மண்டலம் பூஜித்து வணங்கி உள்ளார். அத்தனை
சிறப்பு வாய்ந்த இத்தலம் இன்று சிதிலமடைந்து கிடக்கிறது. அம்பாள் மண்டபம்
பழுதடைந்து மரம், செடி, கொடிகள் மண்டி, விஷ ஜந்துகள் வாழிட மாக இருக்கிறது.


எந்த நேரத்திலும் இடிந்து விழலாம்! சிவாலயங்களுக்கே உரிய மகா
சிவராத்திரி, மாத சிவராத்திரி, மார்கழி தனுர் மாத பூஜை, கிருத்திகை விழா,
பஞ்சமூர்த்தி புறப்பாடு என எவ்வளவோ திருவிழா கண்ட கோயில், இன்று அவற்றில்
எதுவும் நிகழாமல் மௌனம் காப்பது, மனதை வருத்தும் சோகம். ஆனால், எத்தனை
மோசமாகத் தமது ஆலயம் விளங்கினாலும் தம்மை அண்டி வந்தவர்களை அன்னையும்
அரனும் காக்கத் தவறவில்லை. கல்யாண வரம் தருவதில் அன்னை கற்பக விருட்சம்.
கடன் தீர்க்க அருள்வதில் அரன் முன்னிற்கிறார்.

தனுசு, ரிஷப
ராசிக்காரர்களுக்கு பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது இத்தலம். சுவாமிக்கும்
அம்பாளுக்கும் வெள்ளைநிற புஷ்பம் வெள்ளை வஸ்திரம், வெள்ளைத் தாமரை
அர்ப்பணித்து, சர்க்கரைப் பொங்கல், கற்கண்டு பொங்கல் படைத்து வழிபட
வேண்டிய வரம் உடனே கிடைக்கிறதாம். சிவபக்தர்களும் ஊர் பெரியவர்களும்
புராணப் பெருமை மிக்க இந்த ஆலயத்தை சீர்செய்யும் முயற்சியில்
ஈடுபட்டிருப்பது கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடவைக்கிறது. கும்பகோணம்-
சென்னை சாலையில், சோழபுரத்திற்கு கிழக்கில் 3 கி.மீ. தொலை வில் உள்ளது
இத்தலம். கும்பகோணத்திலிருந்து திருவெள்ளியங்கு டிக்கு பேருந்து,
ஆடுதுறையிலிருந்து மினிபஸ் வசதிகள் உள்ளன. சோழபுரத்திலிருந்து ஆட்டோவிலும்
வரலாம். ஆலய தொடர்புக்கு: 9940053289, 9443873697.









<table border="0" cellpadding="0" cellspacing="0" width="600"><tr>
<td align="left" valign="top">
</td></tr></table>
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum