டெண்டுல்கர் நெருக்கடியான நேரத்தில் இருக்கும் போது அவருடன் துணை நிற்க வேண்டும்!
Page 1 of 1

மும்பை டெஸ்டில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் இரு இன்னிங்சிலும் 16 (8, ரன்களே எடுத்தார்.
கடந்த 10 இன்னிங்சில் அவர் கணிசமான ரன்களை குவிக்கவில்லை. இதனால் அவர் ஓய்வுபெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தனது எதிர்காலம் குறித்து தேர்வு குழுவிடம் பேச வேண்டுமென்று கவாஸ்கரும், கபில்தேவும் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பட்டீலை, சச்சின் சந்தித்து பேசியதாகவும், அணியில் தன்னை சேர்ப்பது குறித்து தேர்வு குழுவினரே முடிவு செய்யலாம் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனை கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் ஜக்தாலே மறுத்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெறும் 3வது டெஸ்டில் சச்சின் சேர்க்கப்பட்டுள்ளார். கொல்கத்தாவிலும், நாக்பூரிலும் சச்சின் சோபிக்காவிட்டால் அவருடைய எதிர்காலம் குறித்து அவரிடமே பேசப்படும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
என்றாலும் பிசிசிஐ உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, டெண்டுல்கர் ஒரு சாம்பியன். அவர் நெருக்கடியான நேரத்தில் இருக்கும் போது அவருடன் துணை நிற்க வேண்டும். பிசிசிஐ அவருக்கு துணையாக நிற்கும் என்றார். கொல்கத்தாவிலும், நாக்பூரிலும் அவர் அதிக ரன்களை குவிக்காவிட்டால், அவர் நீக்கப்படுவாரா என்று கேட்ட போது, டெண்டுல்கர் நெருக்கடியான நேரத்தில் பல விமர்சனங்களை தாண்டி ஜொலித்துள்ளார்.
எனவே வரும் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார். சச்சின் டெண்டுல்கர், சந்தீப் பட்டீலை சந்தித்து பேசியது தொடர்பான செய்தி மீடியாக்களில் வெளிவந்த உடன் அவருடைய நெருங்கிய நண்பரும், முன்னாள் வீரருமான ஒருவர் சச்சினை சந்தித்து பேசியுள்ளார். அப்போது சச்சினிடம், மீடியாக்களில் வந்த செய்தி உண்மை தானா என்று கேட்டுள்ளார். அப்போது அவர் புன்னகைத்தவாறே, மீடியாக்களில் வந்த செய்தி தவறானது. நான் ஏன் அப்படி செய்ய வேண்டும். என்னுடைய வேலை சிறப்பாக விளையாட வேண்டுமென்பது தான் என்று கூறியிருக்கிறார். சச்சினுக்கு சக விளையாட்டு வீரர்கள் ஆதரவாக உள்ளனர். அவர்கள் சச்சின் தொடர்ந்து ஆட வேண்டும் என்றே விருப்பம் தெரிவித்துள்ளனர்.
விமர்சனங்கள் பல வந்தாலும் சச்சினோ, தனது கடமையிலேயே கண்ணாக உள்ளார். நேற்று மும்பை பாந்ரா குர்லா காம்ப்ளக்சில் சச்சின் சுமார் 2 மணி நேரம் பயிற்சியில் ஈடுபட்டார். அவருக்கு மும்பை 25 வயதிற்குட்பட்ட அணி வீரர்கள் 12 பேர் பவுலிங் செய்தனர். சுழற்பந்து மட்டுமல்லாமல் வேகப்பந்து வீச்சாளர்களிடமும் அவர் பயிற்சி எடுத்துக் கொண்டார். அப்போது அவர் அடித்த பந்துகள் மைதானத்துக்கு வெளியே சென்றன. கொல்கத்தா டெஸ்டில் அதிக ரன் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் சச்சின் இருக்கிறார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உயிருடன் இருக்கும் போது நல்லது செய்!
» டயட்ல இருக்கும் போது இரும்புச்சத்துள்ள உணவையும் சேத்துக்கோங்க
» டயட்-ல இருக்கும் போது நட்ஸையும் சேர்த்துக்கோங்க...
» டயட்ல இருக்கும் போது இரும்புச்சத்துள்ள உணவையும் சேத்துக்கோங்க...
» கர்ப்பமாக இருக்கும் போது உணவை கவனமா சாப்பிடுங்க…

Permissions in this forum:
You cannot reply to topics in this forum