தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பேஸ்புக்கிலும் சச்சின் சாதனை! Pic

Go down

பேஸ்புக்கிலும் சச்சின் சாதனை! Pic Empty பேஸ்புக்கிலும் சச்சின் சாதனை! Pic

Post  meenu Sun Mar 17, 2013 12:58 pm

சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சினை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சச்சின் டெண்டுல்கர் கடந்த 2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பேஸ்புக்கில் இணைந்தார், இதில் தன்னுடைய கருத்துகளை வீடியோ மூலமாகவும் தெரிவித்து வந்தார்.

முதன் முதலாக பேஸ்புக் கணக்கை தொடங்கிய சச்சின், எனது பேஸ்புக்கிற்கு அனைவரையும் வரவேற்கிறேன், இந்தியாவிற்காக விளையாட வேண்டும் என்பது என் சிறுவயது கனவு.

கடந்த 22 ஆண்டுகளாக உலக கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்பதும் கனவு தான், உங்களின் ஆதரவில்லாமல் இதுவெல்லாம் நடந்திருக்காது. இந்த வாய்ப்பை கொடுத்த கடவுள், எனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கும் நன்றி என தெரிவித்தார்.

இது வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே 4 லட்சம் பேர் சச்சினை பின்பற்ற தொடங்கினர். இந்நிலையில் தற்போது பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 90 லட்சமாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து சச்சின் வெளியிட்ட பேஸ்புக் செய்தியில், என்னை ஸ்பெஷலாக உணரச் செய்த அனைவருக்கும் 90 லட்சம் நன்றிகள் என தெரிவித்துள்ளார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum