வாசனை திரவிய நிறுவனத்தை தொடங்கினார் டோனி! Pics
Page 1 of 1
வாசனை திரவிய நிறுவனத்தை தொடங்கினார் டோனி! Pics
Published On: Fri, Feb 1st, 2013
விளையாட்டு | By admin
வாசனை திரவிய நிறுவனத்தை தொடங்கினார் டோனி! Pics
1
நறுமணப் பொருட்கள் தயாரித்து விற்கும் தொழிலில் இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி கால் பதித்துள்ளார்.
பிரபல டென்னிஸ் வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், இங்கிலாந்து கால்பந்து நட்சத்திரம் டேவிட் பெக்காம் ஆகியோர் சர்வதேச அளவில் நறுமணப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்த வரிசையில் அணித்தலைவர் டோனியும் இறங்கியுள்ளார்.
இத்துறையில் கால் பதிக்கும் முதல் இந்திய வீரர் டோனி தான். இதற்கு டோனியின் அதிர்ஷ்ட எண்ணான ’7′ஐ சேர்த்து, ’7 பை எம்.எஸ்.டோனி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
துபாயில் நடந்த இவ்விழாவில் 6 வகையான ‘பாடி ஸ்பிரே’ வகையை அறிமுகம் செய்தார் டோனி.
இது குறித்து டோனி கூறுகையில், கடந்த 1981, யூலை 7ல் பிறந்தேன். எனது ‘ஜெர்சி’ எண் 7. மொத்தத்தில் எனது ராசியான எண் 7, மிகவும் ‘ஸ்பெஷலானது’.
இந்த எண்ணை மிகவும் நேசிக்கிறேன். ‘நெகடிவ்’ அல்லது ‘பாசிடிவ்’ என்று இரண்டுக்கும் இல்லாமல் நடுநிலையானது இந்த எண் என்றும் இதனால் தான் பெயரிலும் இதை சேர்த்துள்ளேன் எனவும் கூறினார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வாசனை சீயக்காய்
» ஆன்லைன் மியூசிக் ஷாப் – தொடங்கினார் ஏஆர்.ரஹ்மான்
» வாசனை சிகிச்சை வாசனை சிகிச்சை
» மரணத்தின் வாசனை
» கருவறை வாசனை
» ஆன்லைன் மியூசிக் ஷாப் – தொடங்கினார் ஏஆர்.ரஹ்மான்
» வாசனை சிகிச்சை வாசனை சிகிச்சை
» மரணத்தின் வாசனை
» கருவறை வாசனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum