கெட்டி உருண்டை
Page 1 of 1
கெட்டி உருண்டை
தேவையானப்பொருட்கள்:
பச்சை பயறு – 2 கப்
புழுங்கலரிசி – 1/2 கப்
பொட்டு கடலை – 1/2 கப்
தேங்காய் (பல்லு பல்லாக நறுக்கியது) – 1/2 கப்
வெல்லம் (தூளாக்கியது) – ஒன்றரைக் கப்
ஏலக்காய் பொடி[/wikipop] – 1/2 டீஸ்பூன்
சுக்குப் பொடி - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
வெறும் வாணலியில் பச்சைப்பயறையும், அரிசியையும், தனித்தனியாகப் போட்டு, சிவக்க வறுத்தெடுக்கவும். அதே வாணலியில் பொட்டுக்கடலையைப் போட்டு, 2 அல்லது 3 நிமிடங்கள் வறுத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் தேங்காய்த்துண்டுகளைப் போட்டு சிவக்க வறுத்தெடுத்து, அதையும் தனியாக வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் வறுத்த பயறையும், அரிசியையும் சிறிது சிறிதாகப் போட்டு நன்றாக அரைத்தெடுக்கவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அரைத்த மாவு, வறுத்த பொட்டுக்கடலை, தேங்காய்த்துண்டுகள், ஏலக்காய் பொடி, சுக்குப்பொடி ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கலந்துக் கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அத்துடன் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கொதிக்க ஆரம்பித்ததும், அதை எடுத்து வடிகட்டி விட்டு மீண்டும் ஒரு பாத்திரத்தில் ஊற்றி கம்பி பாகு பதத்திற்கு காய்ச்சவும். அடுப்பை நன்றாகக் குறைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு தட்டில், 3 அல்லது 4 கரண்டி மாவைப் போட்டு, அதன் மேல் ஒன்று அல்லது இரண்டு கரண்டி வெல்லப்ப்பாகை ஊற்றி, ஒரு ஸ்பூனால் கலந்து, உடனடியாக உருண்டை பிடிக்கவும். தட்டிலுள்ள மாவில் பாகு அதிகமாக தெரிந்தால், அதில் மேலும் சிறிது மாவைச் சேர்த்துக் கொள்ளவும். மாவு அதிகமாக இருந்தால் பாகைச் சேர்த்துக் கொள்ளவும். இப்படியே எல்லா மாவையும் பாகையும் சேர்த்து உருண்டை பிடிக்கவும். சில சமயங்களில், பாகு அடுப்பிலேயே இருப்பதால் கெட்டியாகி விடும், அப்பொழுது ஓரிரு டீஸ்பூன் தண்ணிரைச் சேர்த்து பாகை கிளறி விடவும்.
மேற்கண்ட அளவிற்கு சுமார் 20 உருண்டைகள் கிடைக்கும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum