பருப்பு பொடி
Page 1 of 1
பருப்பு பொடி
தேவையானப் பொருட்கள்:
துவரம் பருப்பு- அரைக் கோப்பை
உளுத்தம்பருப்பு -கால்கோப்பை
காய்ந்த மிளகாய் – ஆறு
மிளகு -இரண்டு தேக்கரண்டி
சீரகம் -ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் -அரைத் தேக்கரண்டி
உலர்ந்த கறிவேப்பிலை -கால் கோப்பை
உலர்ந்த கொத்தமல்லி -சிறிது
உப்பு -அரைத் தேக்கரண்டி
செய்முறை:
வெறும் கடாயில் மிளகு சீரகத்தை பொரியவிடவும். பின்பு துவரம்பருப்பு உளுந்து காய்ந்த மிளகாயைப் போட்டு இளஞ் சிவப்பாக வறுத்து ஆறவைக்கவும். அதில் பெருங்காயம் உப்பு மற்றும் கொத்தமல்லி கறிவேப்பிலையைச் சேர்த்து கரகரப்பாக பொடிக்கவும்.
இவை சூடான சாதத்தில் நெய் விட்டு பிசைந்து சாப்பிடவும் மற்றும் கறி கூட்டு பச்சடி வகைகளிலும் சேர்க்கலாம்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum