பீட்ரூட் கறி
Page 1 of 1
பீட்ரூட் கறி
தேவையான பொருள்கள்:
பீட்ரூட் = கால் கிலோ
மிளகாய் பொடி = அரை ஸ்பூன்
தனியா பொடி = அரை ஸ்பூன்
அரிசி மாவு = 2 ஸ்பூன்
சீரகம் = அரை ஸ்பூன்
வறுத்த வேர்கடலை = 100 கிராம்
தேங்காய் = கால் மூடி
பச்சை மிளகாய் = 2
இஞ்சி = சிறிய துண்டு
எண்ணெய்= 3 ஸ்பூன்
பட்டை = 2
சோம்பு = அரை ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
கொத்தமல்லி இலை =சிறிது
செய்முறை:
பீட்ரூட்டை துருவிக் கொள்ளவும். தேங்காயை சிறு சிறு துண்டாகக் கீறிக் கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி தட்டிக் கொள்ளவும்.
சிறிது எண்ணெயில் தேங்காயைப் போட்டு சிவப்பாக ஆகும் வரை வறுத்துக் கொள்ளவும். இதையும் வேர்கடலையும் மிக்ஸியில் போட்டு கரகரப்பாக பொடிக்கவும். சோம்பை ஒன்றிரண்டாகப் பொடிக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, சோம்பு தாளித்துக் கொண்டு நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதக்கியதும் பீட்ரூட், மிளகாய் பொடி, தனியா பொடி, சீரகம், உப்பு சேர்த்து வதக்கவும். இவை வதங்கியதும் பீட்ரூட்டோடு அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி 10 நிமிடம் வேக வைக்கவும்.
இதை இடை இடையே கிளறி விடவும். இறக்க போகும் போது வேர்கடலை, தேங்காய் பொடியோடு அரிசி மாவையும் கலந்து தூவி கிளறி கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி பரிமாறவும்.
சுவையான பீட்ரூட் கறி தயார். இதை ரைஸ், சப்பாத்தி, நூடுல்ஸ் மற்றும் பரோட்டா ஆகியவற்றோடு பரிமாறலாம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum