வெள்ளரிக்காய் பொரியல்
Page 1 of 1
வெள்ளரிக்காய் பொரியல்
தேவையான பொருள்கள்:
வெள்ளரிக்காய் = அரை கிலோ
பச்சை மிளகாய் = 3
வெங்காயம் = 2
இஞ்சி = சிறிய துண்டு
தேங்காய் = கால் மூடி
கடுகு = அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
கடலைப் பருப்பு = 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் = 2
எண்ணெய் = 2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
வெள்ளரிக்காய் பிஞ்சாக இருந்தால் அப்படியே அரையங்குல துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். முற்றலாக இருந்தால் தோலை சீவி விட்ட பின் அரையங்குல துண்டுகளாக நறுக்கவும். விதைகளையும் நீக்கி விடவும்.
இஞ்சியை தோல் சீவி தட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயம் பொடியாக நறுக்கவும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
வதக்கியதும் வெள்ளரிக்காயை சேர்த்து உப்பு போட்டு வதக்கவும். 5 நிமிடம் மூடி வைக்கவும். நடுவில் ஓரிரு முறை கிளறி விடவும்.
வெந்ததும் துருவிய தேங்காய், கொத்தமல்லி சேர்த்து இறக்கி விடவும்.
சுவையான வெள்ளரிக்காய் பொரியல் தயார். இதை ரைஸ், குறிப்பாக வற்றல் குழம்பு, சப்பாத்தி ஆகியவற்றோடு பரிமாறலாம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum