கேரட் பச்சைப்பட்டாணி கறி
Page 1 of 1
கேரட் பச்சைப்பட்டாணி கறி
தேவையான பொருள்கள்:
கேரட் = அரை கிலோ
பச்சை பட்டாணி = 150 கிராம்
இஞ்சி = சிறிது
பூண்டு = 10 பல்
தேங்காய் = கால் மூடி
பச்சை மிளகாய் = 4
மஞ்சள் பொடி = கால் ஸ்பூன்
மிளகாய் பொடி = அரை ஸ்பூன்
சீரகம் = அரை ஸ்பூன்
வெங்காயத்தாள் = 2
எண்ணெய் = 2 ஸ்பூன்
வெண்ணெய் = 2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
கேரட்டை பொடி பொடியாக நறுக்கவும். பச்சை பட்டாணியை உரித்துக் கொள்ளவும். வெங்காயம், பூண்டை உரித்து பொடியாக நறுக்கவும். தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைக்கவும். வெங்காயத்தாளைப் பொடியாக நறுக்கவும்.
வாணலியை காய விட்டு எண்ணெய் விடவும். சீரகம் சேர்த்துத் தாளிக்கவும். அதனோடு வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் பச்சை பட்டாணி சேர்க்கவும். இதையும் சேர்த்து வதக்கி சிறிது நீர் விட்டு வேக விடவும்.
பாதி வெந்ததும் பொடியாக நறுக்கிய கேரட்டைப் போட்டு தேவையான அளவு உப்பு, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து அரைத்த மசாலாவை சேர்த்து மூடி வைத்து வேக விடவும். 5 நிமிடம் வெந்ததும் திறந்தால் பச்சை பட்டாணியும், கேரட்டும் வெந்து இருக்கும்.
நறுக்கிய வெங்காயத்தாள் அல்லது கொத்தமல்லி சேர்த்து வெண்ணெய் சேர்த்துக் கலந்து இறக்கவும்.
சுவையான கேரட் பச்சைப்பட்டாணி கறி தயார். இது புது விதமான சுவையோடு இருக்கும். இதை ரைஸ் மற்றும் சப்பாத்தி, பரோட்டா, நூடுல்ஸ் போன்றவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
கேரட்டில் வைட்டமின்கள் A, B, C, D, E, G, K மற்றும் கால்சியம், தாமிரம், அயோடின், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீஸ், பொட்டாசியம், சோடியம் மற்றும் சல்பர் உள்ளது.
இதனால் குறிப்பாக கண்புரை மற்றும் இதர கண் பிரச்சினைகள் குறையும். உடலுக்கு சக்தியளிக்கிறது. இது இரத்த சோகை, இரத்த ஓட்ட பிரச்சினைகள் மற்றும் தோல் நோய்களை குறைக்கும். செரிமான பிரச்சினை மற்றும் புண்கள்,
ஆஸ்துமா போன்றவை குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» கேரட் பச்சைப்பட்டாணி கறி
» கேரட் பச்சைப்பட்டாணி கறி
» வாழைக்காய் பச்சைப்பட்டாணி கறி
» வாழைக்காய் பச்சைப்பட்டாணி கறி
» வாழைக்காய் பச்சைப்பட்டாணி கறி
» கேரட் பச்சைப்பட்டாணி கறி
» வாழைக்காய் பச்சைப்பட்டாணி கறி
» வாழைக்காய் பச்சைப்பட்டாணி கறி
» வாழைக்காய் பச்சைப்பட்டாணி கறி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum