தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

2013 புதுவருட ராசி பலன்கள் – விருச்சிகம்

Go down

2013 புதுவருட ராசி பலன்கள் – விருச்சிகம் Empty 2013 புதுவருட ராசி பலன்கள் – விருச்சிகம்

Post  meenu Sat Mar 16, 2013 5:22 pm



6


viruchchikamமென்மையும், விட்டுக் கொடுக்கும் மனமும், எல்லோருக்கும் உதவும் குணமும் கொண்ட நீங்கள், மற்றவர்களை வழி நடத்துவதில் வல்லவர்கள். வருடம் ஆரம்பிக்கும் போது செவ்வாய் 3-ம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் புதிதாக வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். சிலர் இருக்கும் வீட்டில் கூடுதலாக ஒரு அறை கட்டுவீர்கள். கைமாற்றாக வாங்கியதை தந்து முடிப்பீர்கள். பழைய வாகனத்தை மாற்றி விட்டு புதிய டிசைன் வண்டி வாங்குவீர்கள்.

மகனின் கல்யாணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். சகோதர, சகோதரிகள் பாசமாக நடந்து கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் எல்லோரும் உங்களை மதிப்பார்கள். எதிர்த்துப் பேசியவர்கள், வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். வி.ஐ.பிகள் தக்க நேரத்தில் உங்களுக்கு உதவுவார்கள். சில நேரங்களில் உங்களையும் அறியாமல் சில தவறுகள் நேர்ந்ததல்லவா! இனி எதிலும் கவனமாக செயல்படுவீர்கள்.

உங்களுக்கு 9-வது ராசியில் இந்தாண்டு பிறப்பதால் பணவரவு உயரும். எதிர்ப்புகள் அகலும். கடன் பிரச்னையிலிருந்து விடுபடுவதற்காக ஓயாமல் உழைப்பீர்கள். முகப்பொலிவு, ஆரோக்யம் கூடும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். நெடுநாளாக திட்டமிட்டுக் கொண்டிருந்தீர்களே, இபோது உங்கள் ரசனைக் கேற்ப வீடு அமையும். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும்.

சுக்ரன் உங்கள் ராசிக்குள் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் அடிப்படை வசதிகள் பெருகும். கனிவான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். அநாவசியச் செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளை கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து மீட்பீர்கள். மனைவிவழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். தோலில் நமைச்சல் நீங்கும்.

புதிதாக வீடு, வாகனம் வாங்க எதிர்பார்த்த வங்கியில் கடன் உதவி கிடைக்கும். சிலர் வீட்டை புதுப்பித்துக் கட்டுவார்கள். மனஸ்தாபங்களால் ஒதுங்கியிருந்த உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வேலைத் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும்.

மே 28-ந் தேதி வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் குரு அமர்ந்திருப்பதால் வர வேண்டிய பணம் கைக்கு வரும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய சிக்கல்களை பேசி தீர்ப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். வசதி வாய்ப்புகள் இருந்தும் வீட்டில் விளையாட ஒரு குழந்தை இல்லையே என தவித்த பெற்றோருக்கு அழகான வாரிசு உருவாகும். பிள்ளைகளால் சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும்.

தள்ளிப்போன கல்யாணப் பேச்சுவார்த்தை கூடி வரும். மூத்த சகோதரிக்கு கல்யாணம் நடக்கும். ஆனால் மே 29-ந் தேதி முதல் குருபகவான் 8-ம் வீட்டில் மறைவதால் கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வரும். திடீர் செலவுகள் வந்துப் போகும். ஒரே நேரத்தில் நான்கைந்து வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். குடும்பத்தில் அநாவசியப்பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத பயணங்களும், அலைச்சல்களும் வந்துப் போகும். சித்தர் பீடங்களுக்கு மறவாமல் செல்லுங்கள். குலதெய்வ கோவிலை புதுப்பிப்பீர்கள்.

வருடம் முடியும் வரை ராகு 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால் மறைமுக லாபம் உண்டு. மின்சார, சமையலறை சாதனங்கள் பழுதாகும். எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். திடீர் பயணங்களும், அலைச்சல்களும் அதிகரிக்கும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். நெருங்கியவர்கள் சிலர் நீங்கள் ஒன்று சொல்ல அதை வேறு விதமாக நினைத்துக் கொண்டு உங்களை குறைகூறுவார்கள். இக்காலக் கட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் அலட்சியம் காட்டாதீர்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum