தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழுக்கு அமுதென்று பேர்..! இன்று அனைத்துலகத் தாய்மொழி நாள் – பெப்ரவரி 21!

Go down

தமிழுக்கு அமுதென்று பேர்..! இன்று அனைத்துலகத் தாய்மொழி நாள் – பெப்ரவரி 21! Empty தமிழுக்கு அமுதென்று பேர்..! இன்று அனைத்துலகத் தாய்மொழி நாள் – பெப்ரவரி 21!

Post  meenu Sat Mar 16, 2013 4:59 pm

tamil

அனைத்துலகத் தாய்மொழி நாள் பெப்ரவரி 21 இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகித்தான் தலைநகர் டாக்காவில் வங்காள மொழியை அரசகரும மொழியாக ஆக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூரப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

வங்காளதேச அரசாங்கத்தின் முயற்சிகள், அனைத்துலக அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெசுக்கோ) அமைப்பின் 1999, பெப்ரவரி 21 பொது மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இந்நாளை அனைத்துலக தாய் மொழிநாளாக அறிவித்தது.

பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்த நாளை யுனெசுக்கோ அறிவித்தது. 2000 ஆம் ஆண்டு முதல் இந்த நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

2013 ஆம் ஆண்டின் அனைத்துலகத் தாய்மொழி நாளை ஒட்டி யுனெசுக்கோ பாரிசில் “தாய்மொழிகளும் நூல்களும் – எண்ணிம நூல்களும் பாடநூல்களும்” என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடத்த உள்ளது.

இந்த அனைத்துலகத் தாய்மொழி நாளில் தமிழர்களாகிய நாம் நமது தாய்மொழியாம் தமிழ்மொழியை நினைந்துப் போற்றி, நம்முடைய தாய்மொழிக் கடமைகளை நிறைவாகச் செய்ய உறுதிகொள்ள வேண்டும்.

உலக இனங்கள் எல்லாம் தம்முடைய தாய்மொழியையும் பண்பாட்டு விழுமியங்களையும் மீட்டுக்கொள்ளவும் காத்துக்கொள்ளவும் முனைந்து செயல்படுவதை உணர்ந்துபார்த்து நாமும் அவ்வண்ணமே செயல்பட வேண்ட்டும்.

இல்லையேல், அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு.. அல்லது அடுத்த நூற்றாண்டில் நமது தமிழ்மொழியானது வரலாற்றில் மட்டுமே வாழும் மொழியாக மாறிப்போய்விடலாம்; அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட மொழியாக ஆகிப்போய்விடலாம்.

தமிழ்மொழி ஆளும் மொழியாக இருந்த நூற்றாண்டுகளை வரலாற்றில் கண்டிருக்கிறோம்; தமிழ் மக்களிடையே புழங்கும் மொழியாக இருப்பதைக் கண்டிருக்கிறோம்; புலம்பெயர்ந்து பரவிய மொழியாகக் கண்டிருக்கிறோம்; பன்மொழிகட்கும் சொற்கடன் கொடுத்த மொழியாகக் கண்டிருக்கிறோம். இப்படியாகக் கடந்த நூற்றாண்டுகளைக் கடந்து வந்துவிட்ட தமிழ்மொழி இனிவரும் காலத்திலும் வாழும் மொழியாக தமிழ் மக்கள் வழக்கில்.. தமிழ் மக்கள் வீட்டில்.. தமிழ் மக்கள் நாவில் வாழ வேண்டும்.

அதற்குப் பின்வருவனவற்றில் சிலவற்றையேனும் நாம் உடனடியாகச் செய்தாக வேண்டும்:-

1.குழந்தைக்குத் தமிழ்ப் பெயரைச் சூட்டுவோம்.
2.குழந்தைகளுக்குத் தமிழ்க்கல்வி கற்றுக்கொடுப்போம்.
3.குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவோம்.
4.இல்லங்களுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டுவோம்.
5.இல்ல நிகழ்ச்சிகளைத் தமிழில் நடத்திக் கொள்வோம்.
6.தமிழரிடம் தமிழில் பேசுவோம்.
7.தமிழ்ப் பண்பாட்டைப் பேணுவோம்.
8.தமிழினம் என்ற இன அடையாளத்தை மீட்டமைப்போம்.
9.தமிழ் இனத்தின் பெயரால் ஒன்றுபட்டு நிற்போம்.
10.நாம் தமிழர் என்று மார்தட்டி முழங்குவோம்.
11.தமிழனுக்குத் தமிழன் கைகொடுத்து உதவிடுவோம்.
12.தமிழிய நெறியில் குடும்பத்தை வழிநடத்துவோம்.
13.தமிழால் பூசித்து இறைமையை வழிபடுவோம்.
14.தமிழ் மொழி, இன, பண்பாட்டு, வரலாற்று அறிவு பெறுவோம்.
15.தமிழே மூச்சு, தமிழே உயிர், தமிழே வாழ்வு என வாழ முற்படுவோம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum