திருமணத்துக்கு முன்னான பழக்கம் காதலா?
Page 1 of 1
திருமணத்துக்கு முன்னான பழக்கம் காதலா?
கல்லூரி மற்றும் அலுவலகங்களில் அல்லது வேலை பார்க்கும் இடங்களில் தன்னுடன் படிக்கும், வேலை பார்க்கும் ஆண்கள் பெண்களுடனும், பெண்கள் ஆண்களுடனும் தீவிர நட்புடன் பழகுவதுண்டு. இந்த நட்பில் நல்ல நம்பிக்கை இருக்கும். இதில் எல்லோருக்கும் காமம் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒரு சிலரிடையே மட்டும் இருக்கலாம். பெரும்பாலானவர்களுக்கு அன்பு, நட்பு, அளவுகடந்த பாசம் போன்றவற்றிற்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியாமலே எல்லாவற்றைம் காதல் என்ற பெயரில் போட்டுக் குழப்பிக்கொள்கிறார்கள்.
குடும்பத்தை பற்றி அக்கறை இல்லாமல் சிலர், முழுக்க முழுக்க காதலையே நினைத்துக் கொண்டிருப்பார்கள். எதிர்கால வாழ்வு பற்றிய எவ்வித பொறுப்பும் இருக்காது. அதனால் இதுவும் உண்மையான காதலாக இருக்க முடியாது. ஆனால் வெளிஉலகிற்கு இவர்கள் தீவிர காதலர்கள் போல் தோன்றுவார்கள்.
பொழுதுபோக்கிற்காக பலர் காதலிப்பது உண்டு. கல்லூரி மற்றும் தாம் பணியாற்றும் இடங்களில் தன்னை பற்றி மற்றவர்கள் பெருமையாக நினைக்க வேண்டும் அல்லது பேச வேண்டும் என்பதற்காக யாரையாவது காதலித்துக்கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு காமம்தான் அடிப்படை. இவர்களுக்குள் ஓரளவுதான் நம்பிக்கை இருக்கும். ஆனால் கொஞ்சம்கூட பொறுப்பே இருக்காது. ஆனால் இவர்கள் ஒன்றாக இணைந்து ஊர் சுற்றுவார்கள். பலர் முன்னிலையில் தீவிரமாக காதலிப்பது போல் நடிப்பார்கள். இதை தேறாத காதல் என்று கூறிவிடலாம்.
சினிமா நட்சத்திரங்கள் மீது சிலருக்கு காதல் ஏற்படும். சிலர், தனது காதலை சொல்லாமலேயே, தான் மட்டுமே தனியே காதலித்து ஒருதலையாக அலைந்து கொண்டிருப்பார்கள். சிலர் வயது வித்தியாசமின்றி காதலிப்பார்கள். இவையெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராத காதல்கள். இதை மூடத்தனமான காதல் என்றும் பொருந்தாக் காதல் என்றும் சொல்லலாம்.
ஆனால் முரட்டுத்தனமான நம்பிக்கையும், குருட்டுத் தனமான பொறுப்பும் கொண்டிருப்பார்கள். டீன்ஏஜ் பருவத்தில் உடலும், மனமும் புதுமையைத் தேடும் ஏக்கத்தில் இருக்கும். கண்ணுக்கு அழகாக இருப்பவர்கள் அல்லது தைரியமாக முன்வந்து பேசுபவர்களை மனது விரும்பும். அதை காதல் என்று பெரும்பாலானவர்கள் தவறாக எடுத்துக்கொள்கிறார்கள். எதிர்பாலினரின் உருவம் தவிர வேறு எதைம் அறியாமல் காதலில் விழும்போது அங்கே காமம் மட்டுமே இருக்கும்.
இயல்பான காதல் என்பது முதலில் நம்பிக்கையில் தொடங்கும். பொறுப்புணர்வு முழுமையாக இருக்கும். அதன் பின்னரே காமம் வரும். நம்பிக்கை, பொறுப்புணர்வு, காமம் இவை முன்றும் சரியான விகிதத்தில் கலந்திருப்பதே உண்மையான காதலாகும். காமத்திற்கும், காதலுக்கும் பெருமளவு தொடர்பில்லை. காமம்தான் காதல் என்று சிலர் சொல்வது அவர்களின் அறியாமையே. இருவரும் ஒருவரை ஒருவர் முழுமையாக புரிந்து கொள்வதே இயல்பான காதலின் ஆணிவேர். காதலில் விழுந்த பிறகு, ஒரு ஆணுக்கு, தாம் நேசிக்கும் பெண்தான் உலகிலேயே அழகியாகத் தெரிவாள். (அது உங்கள் மனைவியாக இருக்கட்டுமே) பிறரது விமர்சனங்களை பற்றி கண்டு கொள்ளவோ, ஏற்றுக் கொள்ளவோ மாட்டார்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» திருமணத்துக்கு முன் காதலா?
» காது குடையும் பழக்கம் ஆபத்தானதா?
» மஞ்சள் பூசும் பழக்கம் உண்டா?
» காது குடையும் பழக்கம் ஆபத்தானதா?
» பிரிட்டன் பெண்களிடம் அதிகரிக்கும் பழக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum