வாழ்க்கை இனிக்க கணவன் மனைவியிடையே சின்னச் சின்ன ரொமான்ஸ்!
Page 1 of 1
வாழ்க்கை இனிக்க கணவன் மனைவியிடையே சின்னச் சின்ன ரொமான்ஸ்!
43
news_3271கணவரை, மனைவி கைக்குள்ளேயே வைத்துக்கொள்ள ரொமான்ஸ் ரகசியங்கள் பல உண்டு. இல்லற வாழ்க்கையில் சின்னச் சின்ன ரொமான்ஸ் இருந்தால்தான் வாழ்க்கை இனிக்கும். கணவருக்கு பிடித்த மாதிரியான செயல்பாடுகளை மனைவி செய்வதில் எந்தவித தவறும் இல்லை என்பதே நிபுணர்களின் கருத்து.
ஏனெனில் வீட்டுச் சாப்பாடு நன்றாக இருந்தால் ஹோட்டல் சாப்பாடு பக்கம் கவனம் திரும்பாது இல்லையா? கணவரை கைக்குள்ளேயே வைத்துக் கொள்ள சில ரொமான்ஸ் ரகசியங்களை தெரிவித்துள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.
சந்தோச சமையல் ருசியான உணவு சாப்பிட வேண்டும் என்று அனைவருமே விரும்புவார்கள். அதையும் மனைவியின் கையால் சாப்பிட வேண்டும் என்பது கணவரின் விருப்பமாக இருக்கும். எனவே அவருக்குப் பிடித்தமான உணவுகளை மகிழ்ச்சியாக சமைத்து கொடுங்களேன்.
துணைக்கு அவரையும் அழைத்துக் கொள்ளுங்கள். சமையலும், மையலும் ஒருங்கே சேர அங்கே சந்தோச சமையல் தயாராகும். இன்னைக்கு என்ன ஸ்பெசல்? என்னதான் விதம் விதமாய் சமைத்துப் போட்டாலும் இன்றைக்கு என்ன ஸ்பெசல் என்பதை மனம் எதிர்பார்க்கும்.
ஆண்களின் மனமும் அந்த மாதிரி தான். சமையலறையோ, படுக்கை அறையோ வெரைட்டியாக வேண்டும் என்று ஆண்களின் மனம் எதிர்பார்க்கும். அதில் திருப்தி செய்துவிட்டால் போதும் அப்புறம் அவர்கள் மனைவியின் முந்தானையை மட்டுமே பிடித்துக்கொண்டு சுற்றிவருவார்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
விலை உயர்ந்த கிப்ட் மனைவிக்கு பரிசளிப்பது என்பது கணவருக்கு பிடித்த மானவிசயம். அதேசமயம் கணவர் வீட்டு செலவிற்கு கொடுத்த பணத்தில் மிச்சம் பிடித்து அதில் இருந்து கிப்ட் வாங்கிக் கொடுத்தால் கணவர் குளிர்ந்து போய்வி டுவார்.
எனவே அடிக்கடி இல்லாவிட்டாலும் திருமணநாள், கணவரின் பிறந்த நாளில் மனம் கவர்ந்த பரிசினை வாங்கிக் கொடுங்களேன். வெளியூர் போங்க உள்ளூரிலேயே அதுவும் பார்த்து சலித்த படுக்கை அறையிலேயே எத்தனை நாளைக் குத்தான் இருப்பது. வருடத்திற்கு ஒரு முறையாவது வெளியூர் போங்களேன். கணவருக்கு எந்த இடம் பிடிக்கும் என்பதை பேச்சு வாக்கில் கேட்டு தெரிந்து கொண்டு ரூம் புக் செய்யுங்களேன். புது இடம், புதிதான சூழல் என உங்களின் மூடு மாறும். தம்பதியருக்கு இடையேயான அந்நியோன்னியம் அதிகரிக்கும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சின்னச் சின்ன வெளிச்சங்கள்
» சின்னச் சின்ன வெளிச்சங்கள்
» சின்னச் சின்ன குட்டிக் கதைகள்
» சின்னச் சின்ன சிரிப்புக் கதைகள்
» சின்னச் சின்ன உடற்பயிற்சிகள் வாழ்நாளை அதிகரிக்கும்
» சின்னச் சின்ன வெளிச்சங்கள்
» சின்னச் சின்ன குட்டிக் கதைகள்
» சின்னச் சின்ன சிரிப்புக் கதைகள்
» சின்னச் சின்ன உடற்பயிற்சிகள் வாழ்நாளை அதிகரிக்கும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum