முகப்பருவால் தொல்லையா?
Page 1 of 1
முகப்பருவால் தொல்லையா?
உடலில் சேரும் கொழுப்புச்சத்துக்களின் அலர்ஜியால் முகப்பரு ஏற்படுகிறது. முகப்பரு உள்ளவர்களுக்கு முகத்தை நன்கு சுத்தமாகக் கழுவ வேண்டும். பருக்களைக் கிள்ளவோ, அடிக்கடி கைகளால் தொடவோ கூடாது. மெல்லிய பருத்தி துணியை பயன்படுத்த வெண்டும்.
சேற்றுக் கற்றாளை பூ – 1 துண்டு
செஞ் சந்தனம் பூ – 5 கிராம்
வெள்ளரிக்காய் பூ – 2 துண்டு
சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம் ஊறவைத்து காய்ந்த பிறகு இளம் சூடான நீரில் முகம் கழுவி வந்தால் முகப்பரு மாறி முகம் பளிச்சிடும்.
கரட் – 2 துண்டு
பாதாம் பருப்பு – 2
தயிர் – 1/2 கப்
இவற்றைச் சேர்த்து நன்கு அரைத்து முகத்தில் பூசி காயவைத்து பின் இளஞ் சூடான நீரில் முகம் கழுவி வந்தால் முகப்பரு மாறுவதுடன் முகச் சுருக்கம் நீங்கும்.
ஒலிவ் எண்ணையுடன் சந்தனம் கலந்து இரவு படுக்கைக்கு செல்லும் முன் பூசி மறுநாள் காலையில் முகம் கழுவினால் முகப்பரு நீங்கும்.
பாசிப்பயறு மாவை தேவையான அளவு எடுத்து அதில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து நன்கு கலக்கி முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காயவைத்து பின் நீரில் முகத்தை கழுவி வந்தால் முகப்பரு நீங்கும். பருவினால் உண்டான தழும்புகள் மாறும்.
அவரை இலையைப் பறித்து நன்கு நீரில் கழுவி சுத்தம் செய்து அதனை கசக்கி முகப்பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் பருக்கள் நாளடைவில் மாறும்.
புதினா இலையை அரைத்து முகத்தில் பூசினால் முகம் பொலிவு பெறுவதுடன் முகப்பரு தழும்புகள் மாறும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முகப்பருவால் வந்த வடுவை மறைக்க சில வழிகள்!
» முகப்பருவால் வந்த வடு அதிகமா இருக்கா? கவலைபடாதீங்க...
» பொறாமைக்காரர்களால் தொல்லையா?
» கடன் தொல்லையா? ஜோதிடத்தில் பரிகாரம் என்ன?
» பொடுகுத் தொல்லையா?
» முகப்பருவால் வந்த வடு அதிகமா இருக்கா? கவலைபடாதீங்க...
» பொறாமைக்காரர்களால் தொல்லையா?
» கடன் தொல்லையா? ஜோதிடத்தில் பரிகாரம் என்ன?
» பொடுகுத் தொல்லையா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum