எக்ஸாம் டென்ஷனை விரட்ட அற்புதமான 3 உணவுகள்! (செய்முறையுடன்)
Page 1 of 1
எக்ஸாம் டென்ஷனை விரட்ட அற்புதமான 3 உணவுகள்! (செய்முறையுடன்)
0
எக்ஸாம் டென்ஷன் வந்துவிட்டாலே நன்றாக படிக்கும் பிள்ளைகள் கூட கலங்கிப்போவார்கள். கற்றது எல்லாம் மறந்தது போல் ஆகிவிடும்.
இவ்வாறான எக்ஸாம் டென்ஷனில் இருந்து உங்கள் பிள்ளைகளை காப்பாற்ற அற்புதமான 3 உணவுகளை பார்ப்போம்..!
பிரட் புதினா சாலட்
புதினா ஒரு கப், பச்சை மிளகாய் 2, வெங்காயம் – கால் கப், கொப்பரைத் தேங்காய் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன் மற்றும் தேவையான உப்பு சேர்த்து சட்னி அரைத்துக் கொள்ளவும்.
பிரட் துண்டின் மீது புதினா சட்னி தடவி அதன் மீது வெண்ணெய் தடவிய பிரட் துண்டு வைத்து அடுத்த லேயருக்கு டொமேட்டோ கெச்சப் தடவவும். அதன் மீது வெண்ணெய் தடவிய பிரட் துண்டு வைத்து சாப்பிடலாம்.
இதில் உடலுக்குத் தேவையான புரதம் மற்றும் இரும்புச் சத்து கிடைக்கிறது.
முளைப்பயறு துவையல்
ஏதாவது ஒரு முளை கட்டிய பயறு அரை கப், புதினா ஒரு கட்டு, மிளகு ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு எடுக்கவும்.
முளை கட்டிய பயிறை எண்ணெய்யில் வறுத்து புதினா, மிளகு, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதில் கடைசியாக ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.
சோயாவடை
ஒரு கப் மைதாவை வெண்ணெயில் வறுத்துக் கொள்ளவும். 200 கிராம் பனீரை பொடியாக நறுக்கி வைக்கவும். உதிர்த்த ஒரு கப் பேபி கார்ன், நறுக்கிய 4 பச்சை மிளகாய், 2 டீஸ்பூன் கொத்தமல்லித் தழை, துருவிய சீஸ் 4 டீஸ்பூன், மசித்த உருளைக்கிழங்கு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.
மைதாவை தனியாக கரைத்துக் வைத்துக் கொள்ளவும். உருண்டையை மைதாவில் நனைத்து பிரட் தூளில் ஒற்றி எடுத்து, எண்ணெய்யில் பொரிக்கவும். இதில் புரோட்டீன் மற்றும் தாது சத்துக்கள் உள்ளது.
என்ன டியர் மதர்ஸ்… பிள்ளைகளின் எக்ஸாம் டென்ஷனை விரட்ட தயாரா..!
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி
» டென்ஷனை குறைப்பது எப்படி?
» டென்ஷனை குறைப்பது எப்படி
» அற்புதமான அவரைக்காய்:
» நீங்கள்தான் வின்னர் எக்ஸாம் டிப்ஸ் 2
» டென்ஷனை குறைப்பது எப்படி?
» டென்ஷனை குறைப்பது எப்படி
» அற்புதமான அவரைக்காய்:
» நீங்கள்தான் வின்னர் எக்ஸாம் டிப்ஸ் 2
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum