தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அமீரின் ஆதிபகவன் பெயர் மாற்றம்

Go down

அமீரின் ஆதிபகவன் பெயர் மாற்றம் Empty அமீரின் ஆதிபகவன் பெயர் மாற்றம்

Post  ishwarya Sat Mar 16, 2013 2:24 pm

அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நீது சந்திரா நடித்துள்ள படம் ‘ஆதிபகவன்’. இப்படத்தின் தலைப்பிற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இப்படத்தை தணிக்கை செய்த தணிக்கை குழு இப்படத்தில் சில காட்சிகளை நீக்குமாறும், அப்படி நீக்கினால் தான் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்படும் எனவும் அமீரிடம் வற்புறுத்தினர்.

ஆனால், அமீர் அக்காட்சிகளை நீக்கினால் படத்தின் கதை அடிபடும் எனக்கூறியுள்ளார். எனவே, இப்படத்திற்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும், தணிக்கைக் குழு படத்தின் தலைப்பையும் மாற்றுமாறு அமீரிடம் கேட்டுக்கொண்டது. இதையடுத்து ‘ஆதிபகவன்’, ‘அமீரின் ஆதிபகவன்’ என்ற தலைப்போடு வெளியாகவிருக்கிறது. வருகிற 22-ந் தேதி உலகமெங்கும் இப்படம் வெளியாகிறது.

விஸ்வரூபம் படத்தைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களுக்கு பல்வேறு அமைப்புகள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. இதை தடுக்க, மத்திய அரசும், தணிக்கைத் துறையும் கடுமையான சட்டம் கொண்டு வரவேண்டும் என சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum