தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகர் வடிவேலு மகள் திருமணம்: அரசியல் தலைவர்கள், நடிகர்களுக்கு அழைப்பு

Go down

நடிகர் வடிவேலு மகள் திருமணம்: அரசியல் தலைவர்கள், நடிகர்களுக்கு அழைப்பு Empty நடிகர் வடிவேலு மகள் திருமணம்: அரசியல் தலைவர்கள், நடிகர்களுக்கு அழைப்பு

Post  ishwarya Sat Mar 16, 2013 2:22 pm

நடிகர் வடிவேலு 1991-ல் என்ராசாவின் மனசிலே என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்தார். சொந்த குரலில் நிறைய பாடல்களும் பாடி உள்ளார். கடந்த சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததால் சினிமாவில் பின்னடைவு ஏற்பட்டது.

தேர்தலுக்கு பிறகு புதுப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘தெனாலிராமன்’ என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். யுவராஜ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

இந்த நிலையில் தனது மூத்த மகள் திருமணத்தை நடத்தவும் ஏற்பாடு செய்து வருகிறார். ஏப்ரல் 7-ந்தேதி மதுரையில் இந்த திருமணம் நடக்கிறது. இதற்காக திருமண அழைப்பிதழ் அச்சிடும் பணி நடக்கிறது. அரசியல் கட்சி தலைவர்கள், மற்றும் நடிகர், நடிகைகளுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்து அழைக்க இருக்கிறார். திருமணம் முடிந்த பிறகு முழு வீச்சில் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மகள் திருமணம்: முதல்வர் ஜெயலலிதாவுக்கு அழைப்பு வைத்த இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்!
» மகள் திருமணம்: குழப்பத்தில் வடிவேலு
» மகள் திருமணம்: தி.மு.க.,வின் முக்கிய பிரபலங்களுக்கு வடிவேலு கோரிக்கை
» காமெடி நடிகர் சங்கர் – மோனிகா நந்தினி திருமணம் – வடிவேலு, விவேக் வாழ்த்து!
» ஜெவுடன் ரஜினி சந்திப்பு – மகள் நிச்சயதார்த்தத்துக்கு அழைப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum